மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்
205
அவ்வாறே எடுத்து மொழிந்தவை பெரியதோர் அருவருப் பானவை என்கிறார்.
ஒரு குரங்கு கடலைத் தாண்டிற்று என்றல்,
அஃது ஒரு மலையைப் பெயர்த்துக் கொணர்ந்தது என்றல்
ஒருவன் பத்துத் தலையும்
உடையவனாய் இருந்தான் என்றல்,
பொருந்தாப் புனைவு
ருபது கைகளை
ஒருத்தியை வேறொருவன் சிறையாக எடுத்துச் சென்றக் கால் அவள் இருந்தநிலத்தைப் பெயர்த்தெடுத்துச் சென்றான் என்றல்,
ஒருவன் தன் கையில் இருந்த வட்டத்தைச் சுழற்றி யெறிந்து பகலவனை மறைத்தான் என்றல்,
இன்னவை மக்கள் இயற்கையில் இயற்கையில் எங்கும் எவரும் காணாதன. இத்தகைய புனைவுகளை ஒரு கதையிலாவது ஒரு நாடகத்திலாவது செய்வது நல்லிசைப் புலமை ஆகாது என்கிறார்.
புதுக் கதைகளும் நாடகங்களும் ஆக்குதலின் நோக்கம், இன்பச் சுவையினையும் அதனோடு அறிவு விளக்கத்தினையும் தந்து, அவ்வகையால் மனமாசு நீக்கி மக்கள் ஒழுக்க நெறியைத் தூய்மையாக்குவதே என்று திட்டப்படுத்துகிறார்.
கடுத் தின்னாதானைக் கட்டிபூசித் தின்னச் செய்தல் போலவும்,
நீர் வேட்கையினைக் கானல் நீர் காட்டி நன்னீர் குடிப்பித்தல் போலவும்,
நூலியற்றலின் நோக்கத்தைச் சிலப்பதிகாரம் கூறுதல் போலவும் புனைவு செய்தல் வேண்டும் என்று மேற்கோள் காட்டுகிறார். அந்நெறி திகழவே நூலை நடத்திச் செல்கின்றார்.
"இனிச் சிறுவர்க்கான செந்தமிழ்” என்னும் நூலிலே, மலையைப் பற்றி எழுதும் அடிகளார்,