பக்கம்:மறைமலையம் 7.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

209

அவா மிகுதியும் கொண்டு, அதனை விரும்பிக் கற்கலாயினர். தமிழ்ப் புலவர்களிற் பலரும் அவ்வாராய்ச்சியுரையினைப் பார்த்து வியந்து மகிழ்ந்து அதனைச் சிறந்தெடுத்துப் பாராட்டி எமக்குத் திருமுகங்களும் எழுதி விடுத்தனர்” என்கிறார்அடிகள்.

அதே ஆண்டில் நிகழ்ந்த மதுரைத் தமிழ்ச் சங்க ஆண்டு விழாவில் அடிகளார் இப்புத்துரை ஆய்வை நிகழ்த்தினார். அவ்வவையில் இருந்த தலைவர் பாண்டித் துரையாரும், பெரும்பேராசிரியர் உ.வே. சாமிநாதையர், இலக்கணக் கடல் அரசஞ் சண்முகனார் முதலிய புலவர்களும் அவ்வாராய்ச்சி யுரையினைப் புகழ்ந்து பாராட்டிப் பேசினர்.

ரண்டாம் பதிப்பின் முகவுரையிலே யாம் எழுதுவன பலர்க்கும் உதவியாய் நின்று மேன்மேல் உண்மை நுண்பொருள் ஆராய்தற்கு வழிதிறந்து காட்டிப் பயன்டுதல் பற்றியும், அவற்றால் நம் செந்தமிழ் மொழியின் அருமை பெருமைகளைத் தமிழ் வழங்கும் நாடெங்கும் பரவுதல்பற்றியும் யாம் பெரிதும் இறைவற்கு நன்றி சலுத்துகின்றேம்” என்று அடிகளார் மகிழ்கின்றார்.

உளம்

மகிழ்ந்து

எல்லாம் வல்ல

இப்பட்டினப்பாலை ஆராய்ச்சியுரையைப் பாட்டின் இயல்பு, பட்டினப்பாலைச் செய்யுள், பொருட்பாகுபாடு, பாலை, வாகை, பாட்டின் வரலாறு, ஆக்கியோன் வரலாறு, பாட்டுடைத் தலைவன், பாட்டின் நலம் வியத்தல், இப்பாட்டின்கண் தோன்றிய பழைய நாள் வழக்க ஒழுக்க வரலாற்றுக் குறிப்புகள், பாவும் பாட்டின் நடையும், விளக்க உரைக் குறிப்புகள், அருஞ் சொற்பொருள் அகர வரிசை என்னும் பதின்மூன்று பாகுபாடாக வகுத்துக் கொண்டு வரைந்துள்ளார். முல்லைப்பாட்டு ஆராய்ச்சி யுரையையும் பதின்மூன்று வகைப் பாகுபாட்டிலேயே எழுதினார் எனினும், அப்பாட்டுக்குத் தக்கச்சில வேறுபாடுகளும் உண்டு என்க. ஆயினும் இவ்வீருரையும் ஒரு நெறிப்படச் செல்லுதல் மேலோட்டமாக எவர்க்கும் புலப்படும்.

பாட்டின் இயல்பு :

ஒரு நிலையின்றி ஓடும் அறிவை ஒழுங்குபடுத்துதற்காக அவ்வறிவு பற்றிச் செல்லும் உலகியற் பொருள்களில் அழகு மிக்கவற்றை விரித்துக் கூறி, விரியும் அறிவைச் சுருக்கி அகமுகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/234&oldid=1578364" இலிருந்து மீள்விக்கப்பட்டது