பக்கம்:மறைமலையம் 7.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

மறைமலையம் - 7

படுத்தி உணர்வெழச் செய்வது, நல்லிசைப் புலவர் தம் பாட்டு என்று பாட்டின் இயல்புரைக்கும் அடிகள், அவ்வியலில் பட்டினப்பாலை இயலும் பான்மையை எடுத்துரைக்கிறார்.

ஆசிரியர் உருத்திரங்கண்ணனார், புறப்பொருளில் அளவு கடந்து செல்லும்நம்மறிவை மடக்கி நிறுத்துவதற்காக முதல் 218 அடிகள் வரை உண்மை மாறாது காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றி எடுத்துரைக்கிறார். பாகன் வயப்படாது கடிவாளத்தை அறுத்துக் கொண்டோடும் குதிரையை அப்பொழுதே பிடித்து நிறுத்தி இடர்ப்படாமல், அதன் போக்கிலே ஓடவிட்டு அயர்வுற்ற நிலையில் எளிதாகப் பாகன் அதனை வயப்படுத்துவது போலப் புறப் பொருளில் விரியச் சென்ற அறிவை அகமுகப்படுத்தி ஒடுக்கி அகப்பொருளில், “வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய, வாரேன் வாழிய நெஞ்சே” என இரண்டடியான் மாத்திரம் மிகச் சுருக்கிக் கூறிய ஆ சிரியர் நுட்பத்தைப் பாராட்டுகிறார்.

301 அடியுடைய இப்பாட்டில் 297 அடிகளில் புறப்பொருளும் 4 அடிகளில் மட்டுமே அகப்பொருட் சுருக்கமும் உள்ளமையை நயக்கிறார் (16,17)

பால் கறந்த மாத்திரையே உண்பார்க்குச் சுவை பயக்கு மாயினும் அதனை வற்றக் காய்ச்சிக் கட்டியாகத் திரட்டிப் பின்னுண்பார்க்குக் கழிபெருஞ்சுவை தருதல் போலவும்,

முற்றின கருப்பங்கழியை நறுக்கிப் பிழிந்த மாத்திரையே அதன் சாற்றைப் பருகுவார்க்கு அஃது இனிமை விளைக்கு மாயினும், மேலும் அதனைப் பாகு திரளக் காய்ச்சிச் சருக்கரைக் கட்டியாக எடுத்துண்பார்க்கு ஆற்றவும் பேரினிமை பயத்தல் போலவும்,

ரையும் நலம் பயப்பதொன்றே யாயினும், அதனைக் காட்டினுஞ் செய்யுளாற் பெறப்படும் பயன் சாலவும் பெரிதாம் என்கிறார்.

மேலும், “பாட்டெல்லாம் அறிவு நிலையைப் பற்றிக் கொண்டு போய் உயிர்களின் உணர்வு நிலையை எழுப்பி விடுவதாகும். உரையெல்லாம் அறிவு நிலையைப் பற்றியே நிகழுமல்லது அதன்மேற் சென்று உணர்வு நிலையைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/235&oldid=1578365" இலிருந்து மீள்விக்கப்பட்டது