பக்கம்:மறைமலையம் 7.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

211

தொடமாட்டாதாகும். பெரியதோர் மலை முழைஞ்சினுட் பொன்னும் மணியும் சிதறிக் கிடத்தல் வியப்பன்று; ஒரு சிறு கற்பிளவிலே அரிய பெரிய முழு மணிகள் அடுக்கடுக்காய்க் கிடந்து எடுக்குந்தோறும் குறைபடா திருத்தலே பெரிதும் வியக்கற்பாலதாம். சிறிய வான்மீன்கள் அகன்ற அவ்வானத்திற் காணப்படுதல் ஒரு வியப்பன்று; அகன்றவானும் வேறு மாளிகை கூட கோபுரங்களும் ஒரு சிறிய கண்ணாடியினுட் காணப்படுதலே மிகவும் வியக்கற்பால தாம். எனப் பெரிய உரைக்கும், சிறிய பாவுக்கும் உள்ள இயல்பை விளக்குகிறார். பாடற் சுவையையும் சுருக்க வடிவையும் அருமையாக விளக்கும் அடிகள் அவ்வகையாலேயே இப்பாடலை ஆய்ந்து

வரைகின்றார்.

பொருட் பாகுபாடு :

பொருட்பாகுபாட்டினைக் காவிரியாற்றின் சிறப்பு, சோழ நாட்டு மருத நில வளம், பாக்கம், படப்பை முதலியன. சோறிடும் அட்டிற் சாலைகள், பள்ளிகள், காளி கோட்டம், குப்பம், புறச்சேரி, காவிரித் துறை, கடையாமம், சங்கங்கொள்வோர், பண்டக சாலை, அங்காடித் தெரு, கொடிச் சிறப்பு, பொருள் வளம், வேளாளர் குடியிருப்பு, காவிரிப்பூம் பட்டினச் சிறப்பு, கருக் கொண்ட பொருள், கரிகாலன், இளந்தை வெற்றி, மருத நிலம் பாழாதல், அம்பலங்கள் பாழ்படல், மன்றம் பாழ்படல், கரிகாலன் வெற்றித் திரு. கருப்பொருள் முடிபு எனப் பாகுபாடு செய்து வினைமுடிபு காட்டுகிறார். இம்முறையே முறையாய்ப் பொருட்பாகு பாட்டுக்குத் திரண்ட பொருள் தருவதுடன் பின்னே விளக்க உரைக் குறிப்புகளும் வரைகின்றார்.

கப்பொரும் பாலையும், புறப்பொருள் வாகையும் ஒத்தியலும் வகையை “அகத்தே நிகழும் அன்பை வெற்றி காணும் “பாலை”யும் புறத்தே நிகழும் பகைவர் மறத்தை வெற்றி காணும் வாகையும் தம்முள் ஒப்புமையுடையவாதல்

தெற்றெனப் புலப்படும் என்கிறார் (48)

பாட்டின் வரலாறு :

“பாட்டின் வரலாற்றை உய்த்துணர்ந்து காட்டல் இழுக்காது எனக் கூறி, அப்பாட்டின் பொருளைக் கடியலூர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/236&oldid=1578366" இலிருந்து மீள்விக்கப்பட்டது