மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்
215
யாழ் முதலிய கருவிகளினின்று போதரும் ஒலிபோல் மிகவும் தித்தியா நின்றது என்றும்,
நீர்மடையிலே தெள்ளத் தெளிந்த அருவிநீர்திரண்டு ஒழுகுதல் போல் இச் செய்யுளோசையும் மெல்லென்று மொழு மொழுவெனச் செல்கின்றது என்றும்,
மாம்பழச் சாறு பெய்த குடுவையின் எப்பக்கத்தே பொத்திட்டு நாவை நீட்டினும் அதன் வழியே யொழுகும் அச்சாறு தித்தித்தல் போல, இவ்வரிய செய்யுள் எவ்விடத்தே அறிவு தோயினும் ஆண்டு இனிமையே விளையா நின்றது என்றும்,
பயன்படாது நிற்கும் சொல் ஒன்று தானும் இதன்கண் காணப்படுவதில்லை. விலை வரம்பறியாப் பட்டாடையின்கண் ஒவ்வோர் இழையும் பிணைந்து நின்று அவ்வாடையினை ஆக்குதல்போல, இதன்கண் ஒவ்வொரு சொல்லும் ஒன்றை ஒன்று கௌவிக் கொண்டு இச்செய்யுளை ஆக்குகின்றது என்றும் இப்பாட்டின் நயங்களைப் பாராட்டுகிறார்.
அடிகளார் ஒரு நூலை எப்படிச் சொல் சொல்லாக எண்ணிப் படித்தார் என்பதை விளக்குவதுபோல், "இப்பாட்டின்கண் சிறிதேறக்குறைய ஆயிரத்து முந்நூற்று அறுபத்தொன்பது சொற்கள் இருக்கின்றன. இவற்றுட் பதினொரு சொற்கள் வடசொற்களாம். அவை மகம், அங்கி, ஆவுதி, பூதம், மது, பலி, பதாகை, அமரர், கங்கை, புண்ணியம்,” என்பவனாம். ஞமலி என்னும் ஒரு சொல் பூழி நாட்டிற்குரிய திசைக் சொல்லாகும். ஆகவே இப்பாட்டில் நூற்றுக்கு ஒன்று விழுக்காடு பிற நாட்டுச் சொற்கள் கலந்தன என்பது அறியற் பாற்று. இதனால் இவ்வாசிரியர் காலத்தில் தமிழ் மிகவும் தூயதாக வழங்கப்பட்டு வந்த தென்பது புலப்படும் என்க” என்கிறார்.
சமம்
எடுத்துக் கொண்ட பாட்டை ஆர்வத்தால் பாராட்டு கிறார். என்று எண்ணுவார். உண்டாயின் “இம்முல்லைப் பாட்டை ஏனை ஒன்பது பாட்டுகளோடும் ஒப்ப வைத்து நோக்குங்கால் இஃது ஏனையவற்றைப் போல் மிக உயர்ந்த தீஞ்சுவை நடையினதாகக் காணப்படவில்லை என்றும்,