பக்கம்:மறைமலையம் 7.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

217

வ்வாறு இடை

டையே முடிந்தும் முடியாமலும் கடை சியாக அப்பாட்டின்கட்

நிற்கும் பொருள்கள்,

கருக்கொண்ட முதற்பொருளைச் சார்ந்து முடியுமாகலின் சார்பு பொருள்கள் என்று பெயர் பெறுவனவாகும். இச்சார்பு பொருள்களோடு கூடிச் சிறந்து விளங்கும் பொருள் முதற் பொருள் எனப்படும்.

ஒருவன்

முடியணிவேந்தன் அருமணி குயிற்றிய சங்கோல் கைப்பற்றி அரியணை, வீற்றிருப்ப, அவனைச் சார்ந்து நின்று, அவன்தன் அரசியற் சுற்றமெல்லாம் விளங்கி னாற்போல ஒரு பாட்டின் கட் கருக்கொண்ட முதற்பொருள் அதற்கு ஓருயிராய்ச் சிறந்து நிற்ப ஏனைச் சார்பு பொருள் களெல்லாம் அதனைச் சூழ்ந்து கொண்டு அதனைச் சிறப்பித்து அவ்வாற்றால் தாமும் விளங்கா நிற்கும் என விளக்கும் அடிகளார், நச்சினார்க்கினியர் அதனைக் கொண்டுணர்ந்த வகையை வெளிப்படுத்துகிறார்.

மாட்டும் நச்சினார்க்கினியரும் :

மாட்டு என்னும் பொருள்கோள்முறை இதுவேயாதல் அறிய மாட்டாத நச்சினார்க்கினியர், இப்பத்துப்பாட்டு கட்கும் ஒருமுறையுமின்றி ஓரிடத்து நின்ற ஒரு சொல்லையும், பிறிதோரிடத்து நின்ற பிறிதொரு சொல்லையும் எடுத்து இணைத்து உரை உரைக்கின்றார். அங்ஙன முறைகூறுதல் நூலாசிரியன் கருத்துக்கு முற்றும் முரணாதலானும், இவர்க்கு முன்னிருந்த நக்கீரனாரை உள்ளிட்ட தொல்லாசிரியர் எவரும் இவ்வாறு உரை உரைப்பக் காணாமையாலும் நச்சினார்க் கினியர் உரைமுறை கொள்ளற்பால தன்றென மறுக்க என வரைகின்றார்.

விளக்க உரைக் குறிப்புப் பகுதியிலே இம்மாட்டு இலக்கண விளக்கம் முதல் 18 இடங்களில் அவரை அடிகளார் மறுத்து எழுதுகிறார்.

அவற்றுள் ஓரிரு L ங்களைக் கண்ட அளவானே, அடிகளார் கொண்ட வரைமுறை இயல்பாக நூலாசிரியன் கருத்தொடும் இணைந்து செல்லுதல் விளக்கமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/242&oldid=1578372" இலிருந்து மீள்விக்கப்பட்டது