பக்கம்:மறைமலையம் 7.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

மறைமலையம் - 7

திருத்திய பின் இவரைச் செந்தமிழ் மாமுகில் வள்ளலாய்க் காண்டு வழிபடுவோம் என்க” என்று எழுதும் பகுதி இவர்தம் ஆய்வியல் அறநெஞ்சையும் செந்தண்மை சேர தண்மையையும் ஒரு சேரக் காட்டுவதாம்.

அந்

பட்டினப்பாலையில் அமைந்துள்ள 27 பொருத்து வாய்களையும் (மாட்டுகளையும்) அருமையாக இணைத்து நூலாய்வை நிறைவு செய்கிறார். மேலாய்வுக்குப் பயன்படும் வகையிலும் இன்னவாறு நூலில் வரும்அருஞ் சொற்பொருள் அகரவரிசைகளையெல்லாம் ஒரு சேரத் தொகுப்பின் ஓர் அரிய அகர முதலி வாய்க்கும் வகையில், அகவ முதல் வைகல் ஈறாக அருஞ்சொற்களை அடைவு செய்து, சொற்பொருளும் விளக்கமும் வரைந்து வைத்து, இவ்வகரவரிசை கொண்டே நூற்பொருளைக் கற்பார் தாமே கண்டு ம கொள்ள வழி

டியுள்ளார். இலக்கிய ஆய்வாளர் செய்தக்க செயற் பாடுகளைச் செய்து காட்டிய ஆய்வுச் சான்று இப்பட்டினப் பாலை ஆராய்ச்சியுரை என்பதைச் சொல்லி அடுத்துச் சமய ஆராய்ச்சித்திறன் என்னும் பகுதியைக் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/245&oldid=1578375" இலிருந்து மீள்விக்கப்பட்டது