பக்கம்:மறைமலையம் 7.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

மறைமலையம் 7

பக்க அளவில் கொண்டுள்ளது. (24+24) பொருளடக்கம் மிக விரிந்த வகையால் பொருள் அனைத்தையும் அடைவுறக் காணுமாறு 76 பக்கங்களில் இயல்கின்றது.

மாணிக்கவாசகர் வரலாறும் ஆய்வும் 164 பக்கங்களைக் கொண்டுள்ளது. பிறப்பு முதல், சிவ வொளியில் மறைந்தமை வரை பதினெண் பகுப்புகளில் அப்பகுதி அமைந்துள்ளது.

பெயர் மாணிக்கவாசகர் பிறப்பு என்னும் முதற்பகுதியில் இவர் தாய் தந்தையார் பெயர் புலப்படவில்லை என்கிறார்.

தந்தையார் பெயர் சம்பு பாதாசிரியர் என்றும் தாயார் பெயர் சிவஞான வதியார் என்றும் சிலர் வழங்குவதை மறுக்கின்றார்.

இப்பெயர்களை,

நம்பியார்

திருவிளையாடலோ,

திருவாதவூரர் புராணமோ கூறவில்லை. இத்தகைய பெயர்கள் பழைய நாளில் இருந்த தமிழர்க்குள் வழங்கப்படவில்லை என இரண்டு காரணங்களைக் காட்டுகிறார்.

திருஞானசம்பந்தர் தந்தையார் பெயர் சிவபாதவிருதயர், தாயார் பெயர் பகவதியார் என்பதை உளங்கொண்ட பிற்காலத்தார் எவரோ இப்பெயர்களைப் புனைந்து கட்டிவிட்டனர் என்கிறார்.

மாணிக்கவாசகரின் பிள்ளைப் பெயர் இன்னதென்று புலனாகவில்லை என்றும் இவர், திருவாதவூரர் மாணிக்க வாசகர் என்னும் பெயர்கள் இயற்பெயர்கள் அல்ல என்கிறார். பரஞ்சோதியார் மணிவாசகர் காலம்பாண்டியன் அரி மர்த்தனன் என்று சொல்லியது சான்று அற்றது அப்பெயர் வடமொழிப் பெயராதலால் ஐயுறற் பாலது என்கிறார்.

இறைவன் அருள் பெற்றது வரையான வரலாறுகளை எடுத்துரைத்த அளவில் “அருள் பெற்ற வரையுள்ள ஆய்வு” என ஆய்கின்றார்.

திருப்பெருந்துறையை அடுத்த அளவில், அன்பின்மிக்கு அங்கே வைகுதல் கருதித் தம்மொடு வந்தாரிடம் ஆவணித் திங்களில் பரிகள் அடையும் என்று அரசற்கு அறிவிக்கக் கூறியதால் திரும்பினர் என நம்பி திருவிளையாடல் கூறுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/247&oldid=1578377" இலிருந்து மீள்விக்கப்பட்டது