பக்கம்:மறைமலையம் 7.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

மறைமலையம் - 7

குருந்து : கோயில் : திருப்பெருந்துறையில் அடிகள் சன்ற காலத்து ஆண்டுச் சிவபிரான் திருக்கோயில் இருந்ததில்லை என்பதற்கு அதன்கண் இஞ்ஞான்றும் சிவலிங்க வடிவம் இல்லாமையும், ஆண்டுச் செய்யப்படும் நாள் வழிபாடு மாணிக்கவாசகர் பெருமாற்கும் அவரை ஆண்டருளிய ஆசிரியன் வைத்துச் சென்ற திருவடிச் சுவட்டிற்குமே ஆற்றப் படுதலும் திருவிழாவென்னும் சிறப்பு வழிபாடு மாணிக்க வாசகப் பெருமாற்கே செய்யப்படுதலும் சான்றாமென்க என்கிறார்.

மேலும் அடிகள் இறைவன் ஆசிரிய வடிவிற்றோன்றி அடிமை கொண்டருளியமையையே சொல்வதல்லாமல் திருக்கோயில் உண்டெனக் கொண்டு திருப்பதிகங்கள் அருளிச் செய்யாமையையும் நிறைமலர்க்குருந்தம் மேவிய சீர் ஆதியே என்றமையயுைம், அடிகட்கு அருட்பாடு நிகழ்ந்த பின்னரே திருக்கோயில் அமைக்கப்பட்டது என்பதையும் கூறுகிறார்.

அடிகட்கு முன்னும் ஆங்குத்திருக்கோயில் உண்டு என்னின், அதன்கண் இந்நாள்வரை சிவலிங்கம் இல்லாமையும், அடிகட்குமுன் இருந்ததாயின் ஆங்குச் சிவலிங்கம் இருந்திருத்தல் வேண்டும் என்றும் முன்னே இருந்து பின்னே இல்லை என்பது பொருந்தாது என்றும் கூறி, திருவாதவூரர் புராணவுரையே உண்மை வரலாறாம் என உறுதிசெய்கின்றார்.

சிவஞானபோதம் முதலியன : குரவன் கையில் சிவஞான போதம் இருந்தது என்பது கட்டிச் சொன்னது என்றும், குரவன் பன்னாள் நிலமிசைத் தங்கினான் அல்லன் ஐந்தெழுந்துண்மை உணர்த்திய ஞான்றே மறைந்தருளினன் என்றும், அடிகள் அன்பின் வடிவாய் மனந்திரிந்து நின்ற நாளில் அரசன் செல்வத்தைத் திருப்பணிக்குச் செலவிட்டமை குற்றமாகாது என்றும் அறப்பணிக்குத் தானே அளியாது போர்ப் பகைக்குச் செலவிட இருந்த பணத்தைத் திருப்பணிக்குச் செலவிட ஏவியது இறைவர்க்கும் இழுக்காகாது என்றும், அப்பாண்டிய மன்னன் இறைமையிற்கனிந்த வரகுணன் அல்லன் என்றும் அடிகள் திருத்தொண்டில் அவர்தம் மனைவியாரும், அருமை மகளாரும் ஒன்றி நின்றனர் என்றும், திருவெம்பாவை அந்நாளில் அவர்கள் பொருட்டாகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/249&oldid=1578379" இலிருந்து மீள்விக்கப்பட்டது