பக்கம்:மறைமலையம் 7.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகன்

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

225

திருப்பெருந்துறையிலே அருளிச் செய்யப்பட்டது என்றும், நரிபரியாக்கியமை அடிகட்கே அன்றிப்பிறர்க்கன்று என்றும், அடிகளைச் சிறைப்படுத்தி வருத்தியது திருவாதவூரிலேயே என்றும், அடிகளை வருத்துங்கால் குயிற்பத்துப்பாடப் பட்டது அன்று என்றும், பரிமேல் வந்த பாகனைக் கண்டு காதல் காண்டார் உரையாக அன்னைப்பத்து பாடப் பட்டது அன்று என்றும், பாகற்குப் பாண்டியன் நல்கிய துகிலைச் செண்டுகோலின் வாங்கினான் என்பதே சரி என்றும் குதிரைப் மன்னனிடம் விடைபெற்றுச் செல்லும் போது பாடப்பட்டதன்று பிடித்த பத்து. இது தம் இல்லம் சென்று பாடியது என்றும், இறையருளால் வைகையில் வெள்ளம் வந்தது எனக் கொள்ளாமல், அறிவில்லா மழையால் வெள்ளம் அடிகட்கு இரங்கி வந்தது ஆகாது என்றும், ஒரு கூடை மண்ணால் பேருடைப்பை அடைத்து மறைந்த இறைவனைப் பிரிந்த துயரால் செத்திலாப் பத்துப்போலும் சில பதிகங்களை அடிகள் பாடினார் என்றும், திருமுதுகுன்றம்; திருவெண்ணெய் நல்லூர் என்னும் திருப்பதிகளுக்குச் சென்று அடிகள் வழிபட் சான்று இன்று என்றும், ஒவ்வொரு திருக்கோயிலில் ஒவ்வொரு கால் ஒன்றும் சிலவும் பலவுமாய் அடிகளாற் பாடப்பட்ட பாட்டுகளே பின்னுள்ளோரால் தமக்குத் தோன்றியவாறு தொகுத்தும் வகுத்தும் வைக்கப்பட்டிருக்கின்றன. இவை யெல்லாம் நுண்ணிய ஆராய்ச்சியுடையார்க்கன்றி ஏனையோர்க்கு ஒரு சிறிதும் விளங்கா என்றும் கூறுகிறார்.”

L

மெய்ப்பொருள் : புத்தரொடு சொற்போர் தொடங்குதல் புத்த சமயக் கோட்பாடுகளை மறுத்தல், சைவசமயக் கோட்பாடுகளை விளக்கல், சமயக் கொள்கைகள் ஆராய்ச்சி, நால்வரே நல்லாசிரியர்கள், பொருந்தாக் கொள்கைகள், பௌத்த குருவுக்கு விளக்கிக் காட்டிய உண்மைகள் ஆகியவை முற்றிலும் மெய்ப்பொருள் ஆய்வேயாம். இவ்விரிவுப்பகுதிகள், அடிகளே திருவாசகத்தின் அகச் சான்று கொண்டு எழுதிய தாகும். இதனை திருவாதவூரர் புராணத்திற்காட்டப்படாத இதனை யாமே கூர்த்தறிந்தெழுதி, அங்ஙனம் எழுதிய சைவ சமயக் கோட்பாடுகள் முற்றும் மாணிக்கவாசகப் பெருமான் தழீஇயினவே யாம் என்பதற்குச் சான்றாக அவர் அருளிச் செய்த திருவாசகம், திருச்சிற்றம்பலக்கோவையார் என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/250&oldid=1578380" இலிருந்து மீள்விக்கப்பட்டது