பக்கம்:மறைமலையம் 7.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

இ ரு

மறைமலையம் - 7

நூல்களிலிருந்து மேற்கோள்களும் உடனுக்குடன் எடுத்துக் காட்டலானேம்” என்கிறார்.

164 பக்கங்களில் மாணிக்கவாசகர் வரலாறும் ஆராய்வும் நிகழ்ந்ததாகவும், அது தொட்டு 942 பக்கம்வரை கால ஆய்வுச் செய்தியே விரிகின்றதாம்,

கால ஆய்வு : வாசகன் என்னும் சொல்அடிகளையே உணர்த்துதல், நான்காம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தமிழ்வேந்தர் பெயர் பெயர் கல்வெட்டில் காணப்பெறாமை, திருமுகப்பாசுரம் கல்லாடத்திற் காணப்படுதல், சிவனடியார் பலர் திருத் தொண்டத் தொகையிற் கூறப்படாமை, திருவாசகம் கல்லாடம் புத்த சமண காலங்களில் தோன்றினமை,

L

க்கோவையாரின் செய்யுட் பொருள் பழந்தமிழ் நூல் களோடு ஒத்தல், வடநாட்டில் கல்வெட்டுகள் உண்டானமைக்கு ஏது, கடைச்சங்கம் இல்லை யாய்ப் போன காலம், திருப்பெருந்துறை தமிழலைக் கூற்றத் துள்ளமை, பௌத்தமதம் தமிழ்நாட்டில் தலையெடுத்ததும் ஒடுங்கியதும், வீடுபேற்றின் கண்ணும் உயிர்கள் உளவாதல், சமணர்கள் தமிழ் ஆகமங்களை அழித்தமை, கட்டிப்பாடும் சூதாட்டப்பாட்டும் இருக்கு வேதத்தில் காணப்படல், மந்திரம் என்னும் சொல் தூய தமிழ்ச் சொல்லாதல், மாணிக்கவாசகரும் நம்மாழ்வாரும், சைவசமயச் சான்றோர் பொய்கையாழ்வார் கருத்தொருமை, நாச்சியார் பெரியாழ்வார் முதலியவர்களைப் பற்றிய ஆராய்ச்சி, திருமங்கையாழ்வார் காலம், பழைய வடநூல்களில் சிவ பெருமான் முழுமுதன்மை, பன்னீராழ்வார் களின் காலவரை யறை, மாணிக்கவாசகர் குறித்த கடைச்சங்க காலம், முச்சங்க வரலாறும் தொல்காப்பிய காலமும், தொல்காப்பிய காலத் தொடர்ச்சி, இறையனாரகப் பொருளு ரையாராய்ச்சித் தொடர்பு, கடைச்சங்க காலத் தொடர்ச்சி, திருத்தொண்டத் தொகையும் திருவாதவூரடிகளும், அப்பர் சம்பந்தர் இருந்த கால ஆராய்ச்சி, மாணிக்கவாசகர்காலத் திட்ட முடிவு என 28 பகுப்புகளில் மாணிக்கவாசகர் காலத்தை ஆராய்ந்து முடிவு செய்கிறார்.

அப்பர் தேவாரச் சான்று : தேவார மூவர்க்கு மாணிக்க வாசகர் முன்னவர் என்பதனை உறுதிப்படுத்துதற்கு வலுவான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/251&oldid=1578381" இலிருந்து மீள்விக்கப்பட்டது