பக்கம்:மறைமலையம் 7.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

227

சான்றுகளாக அப்பரடிகள் அப்பரடிகள் தேவாரத் தொடர்களைக் காட்டுகின்றார் அவை :

அப்பரடிகள் "நரியைக் குதிரை செய்வானும்” என்றது மாணிக்கவாசகர் பொருட்டே நிகழ்ந்த திருவிளையாட்டே என்பது ஒன்று.

"மணியார் வைகைத் திருக்கோட்டின் நின்றதோர் திறமும் தோன்றும்” என்று அவர் அவர் கூறியது மாணிக்கவாசகர் பொருட்டாக இறைவன் மண்சுமந்த திறம் உரைப்பதே என்பது மற்றொன்று.

66

‘குடமுழ நந்தீசனை வாசகனாக் கொண்டாய்” என்று அவர் கூறியது அடிகள் பெயராகிய வாசகன் என்பதே என்பது இன்னொன்று.

நிறைவுக் குறிப்பாகப் பேரூர் பிரமபுரம் பேராவூரும் பெருந்துறை காம்பிலிபிடவூர் பேணும் என அவர் பாடுவதில் உள்ள பெருந்துறை என்பது மாணிக்கவாசகர்க்குக் குரவனாக இறைவன் அருள் செய்த தலமே என்பது பிறிதொன்று.

இவற்றால் அப்பரடிகளின் காலத்திற்கு முன்னவர் மாணிக்கவாசகர் என்பதை உறுதிப்படுத்துகின்றார்.

சங்க காலத்தை அடுத்தே இருந்தார் என்பதை மறுக்கிறார். அடிகளார் பாடிய விருத்தப்பா என்னும் பாவினம் சங்க காலத்தை அடுத்தே இருந்த தில்லை என்று மறுக்கிறார். இனி அப்பரடி களின் காலத்தை ஒட்டிய ஐந்தாம் நூற்றாண் டாகவோ ஆறாம் நூற்றாண்டாகவோ இருத்தல் ஆகாது என்றும் மறுக்கிறார். அடிகளின் பாடல்களில் விருத்தப்பா அரிதாக வழங்கப்படுதலும், கலித்துள்ளலும் அகவலும் பல்கிவரலும் அப்பரடிகள் காலத்தை ஒட்டியிருந்தமைக்குப் பொருந்துவதாகாது என்கிறார்.

"பல்வேறு வகையாலும் உண்மைச் சான்றுகள் என்னும் மணிக்கற்கள் கொண்டு அடிப்படை கோலி, அவற்றின்மேல் எழும்பிய மாணிக்கவாசகர் காலம்என்னும் விழுமிய மெய்ம்மணிக்கோயில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/252&oldid=1578382" இலிருந்து மீள்விக்கப்பட்டது