வரகுணன் :
மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்
233
பெரிய அன்பின் வரகுணன் என்பான் மாணிக்க வாசகர் கால வரகுணன் அல்லன், அவன் இவ்வரகுணன்போல் இறைவன் பால் அன்பில்லாதவனாவன். இருவரும் ஒருவரா மெனக் கொள்ளல் ஆகாது என்பார் (235)
கால மயக்கம் :
66
'நரியைக் குதிரை செய்வானும்” என எதிர்கால நிகழ்ச்சியாகக் கூறியதை இறந்த கால நிகழ்ச்சியாகக் கொண்டு அப்பரடிகளுக்கு முற்பட்டவர் மாணிக்கவாசகர்என்பதை மறுப்பாரை, "இறந்த காலத்தில் நிகழ்ந்ததொன்றனை எதிர்காலத்தின் வைத்து ஓதுதலும், எதிர்காலத்தின் நிகழற் பாலதொன்றனை இறந்த காலத்தின் வைத்து ஓதுதலும் பண்டைத் தமிழ் வழக்கின்கண் உண்மை,
“இறப்பே எதிர்வே ஆயிரு காலமும்
சிறப்பத் தோன்றும் வழங்கு மொழிக் கிளவி’
என்று ஆசிரியர் தொல்காப்பியனார்கூறியமையையும் அதன் உரைகளையும் பிறர் சான்றுகளையும் கூறி, அக்கூற்றுப் பெரியதோர் இழுக்கு என மறுக்கின்றார்: (283)
சமணர், பற்றிய குறிப்பு இன்மை :
மாணிக்க வாசகர் வாக்கில் சமணரைப் பற்றியோ, பல்லவரைப் பற்றியோ குறிப்பு இல்லாமைஅவர் கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்பதை நிலைப்படுத்தும் என்கிறார் (288-9)
பிள்ளையார் :
திருமந்திரத்தில் 47 செய்யுட்கள் மூவாயிரத்தின்மேல் காணப்படுகின்றன. திருமந்திர முதற் செய்யுள் ஒன்றவன் தானே என்பது எனச் சேக்கிழார் உரைத்தாராகவும் அதற்கு முன் போற்றிசைத் தின்னுயிர், என்னும் செய்யுளும், அதற்கு முன் "ஐந்து கரத்தனை” என்னும் செய்யுளும் காணப்படுதல் பின்னவரால் சேர்க்கப்பட்டவையாம். மாணிக்கவாசகர்