பக்கம்:மறைமலையம் 7.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

மறைமலையம் - 7

நூல்களிலும் சங்கத் தமிழ் நூல்களிலும் பிள்ளையாரைப் பற்றிய குறிப்பு எட்டுணையும் இல்லை. ஆனால்தேவாரத்தில் உள்ளதாகலான் இக்குறிப்பு ஒன்றுமே ஏனை மூவர்க்கும் மாணிக்கவாசகர்முன்னவர் என்பதை நாட்டுதற்குப் போதிய சான்றாம் என்கிறார் (352).

மந்திரம்:

மந்திரம் என்பது மறைத்துச் சொல்லுதல். மறைமொழி என்பதும் அது. இப்பொருளில் பழைய ஆரிய நூல்களில் வழங்குதல் யாண்டும் கண்டிலேம். இது தமிழ் நூல் வழக்கே என்பது.

“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப

எனத் தொல்காப்பியம் கூறுதலால்புலப்படும் (385)

அகத்தியரைப் பற்றிய கதைகள் எல்லாம் கட்டி வைத்த பொய்க் கதைகள். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின் வந்த நூல்களிலும் உரைகளிலும் புராணங்களிலும் மட்டுமே அக்கதைகள் காணப்படுகின்றன. இறையனார் அகப்பொருள் பாயிரத்தில் அகத்தியரைப் பற்றியுள்ள செய்தி நக்கீரனார் உரைத்ததன்று. பிற்காலத்தே சேர்க்கப்பட்டதாம். (390-1) அகத்தியர் :

பன்னிரு படலம் அகத்தியர் மாணவர் பன்னிருவர் செய்தது என்பது கட்டுக் கதையே. இக்கதையை நம்பிக் கூறிய புறப் பொருள் வெண்பா மாலைப் பாயிரவுரை உண்மை யற்றதாம் (392)

சிற்றகத்தியம் பேரகத்தியம் என்பவற்றின் போலிச் சூத்திரங்கள் பின்னையோராற் கட்டப்பட்டு அகத்தியர் பெயர் புனைந்து விடப்பட்டனவாதல் தமிழிலக்கணம் வல்லார் நன்குணர்வர் (394)

ராமாயணத்தின்கட்

சொல்லப்பட்ட கதையை

உண்மை யென்று நம்பத் தலைப்பட்டமையால் வந்த குழறு படைகட்கு ஓர் அளவே இல்லை (396)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/259&oldid=1578389" இலிருந்து மீள்விக்கப்பட்டது