மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்
235
திருவாதவூரடிகளாலும் திருமூலராலும் சொல்லப்பட்ட தமிழ் ஆகமங்களே, பின்னவர்களால் காமிகம் காரணம் என மொழி பெயர்க்ப்பட்டுள்ளன (406-7) அவை தச்சுக் கலை பற்றிய பழந்தமிழ் நூல்களே (408)
சான்றுவகை :
சான்றுகள் அகச்சான்றும் புறச்சான்றும் என இரு பாலனவாம். அவற்றுட் புறச்சான்று என்பன பற்றும் L பகைமையும் இல்லா நடுநிலையாளர் கூறும் மெய்யுரைகள். அகச்சான்று என்பன ஓர் ஆசிரியன் தான் இயற்றிய நூல்களில் தன் குறிப்பின்றியே தன் வரலாற்றினையும் தன் இயற்கை யினையும் கூறிவைப்ப, அவைதாம் அறிவுடை யோரால் ஆராய்ந்தெடுக்கப் பட்டு அவ்வாசிரியன் வரலாறும் தன்மையும் துணிதற்குச் சான்றாய் நிற்பன. இவ் வகையில் நம்மாழ்வார் பிறந்த பொழுதே பாலுண்ணாது தவத்தில் இருந்து ஓதாதுணர்ந்தமைக்குக் குறிப்பு இருவகைச் சான்றுகளிலும் இல்லை. திருஞானசம்பந்தர் பாலுண்டு பாடினார் என்றால், நம்மாழ்வார் பாலுண்ணாது பாடினாரென்பது கழிபெரு மேன்மையாமெனக் கதை கட்டிய புலவர் நினைத்தார் போலும்
(410 - 2)
L
பழந்தமிழ் நூற்பொருளும் சொல்லும் நம்மாழ்வார் பாடல் களில் காணக் கிடத்தலால் அவர் ஓதி உணர்ந்ததும், ஞானசம்பந்தர் பாடல்களில் அவ்வாறு காணக் வாமையால் அவர் ஓதா துணர்ந்தவர் என்பதும் புலப்படும்,
6
கட
(4-20)
இராவணனுக்குப் பத்துத் தலைகளும் இருபது தோள் களும் இருந்தன என்பது பழைய இராமாயணப் பகுதிகளில் பெறப்படவில்லை. கபிலரது குறிஞ்சிக் கலிப்பாட்டில் தவிர எங்கும் அவன் பத்துத் தலையுடையவனாய் இருந்தான் என்பது சொல்லப்படவில்லை, (472)
முதலாழ்வார் மூவரும் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதிக்கு முன்னும், எட்டாம் நூற்றாண்டின் நடுவுக்குப் பின்னும் இருந்திலர் என்பதே முடிந்த பொருளாம். (499)