பக்கம்:மறைமலையம் 7.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

சுந்தரர் வயது :

மறைமலையம் 7

சுந்தரர் இரண்டாம் நந்திவர்மன் இறுதிக் காலம் முதல் அவன் மைந்தன் தந்திவர்மன் காலத்தின் முற்பகுதி வரை இருந்தார். இவர் காலம் கி.பி. 760 முதல் 810 வரையாம். திரு முறைகண்ட புராணம் 38000 பதிகம் அருளியதாகக் குறித்தலானும், இவற்றைத் திருக்கோயில்கள் தோறும் சென்று அருளிச் செய்தற்கு முப்பத்தைந்து ஆண்டுகளாயி

வேண்டும் ஆதலாலும், இறையருளால் 16 ஆம் ஆண்டு முதல் பாடத் தொடங்கி யிருந்தாலும் 50 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர் ஆதல் வேண்டும். இவர் 18 ஆண்டு மட்டுமே வாழ்ந்தார் என்னும் ஒரு விடுதிப் பாட்டின் கூற்றுப் பொய்க் கூற்றாம் (510- 2) என்று இன்னவாறு, பல்வேறு ஆய்வுகளை நிகழ்த்துகிறார். ஆய்வு விரிவு :

-

பழைய வட நூல்களில் சிவபெருமானின் முழுமுதன்மை கூறப்பட்டதையும், பன்னீராழ்வார்களின் கால வரையறை யையும், மாணிக்கவாசகர் குறித்த கடைச்சங்க காலத்தையும், முச்சங்க வரலாறு, தொல்காப்பியர் காலம் என்பவற்றையும் திருத்தொண்டத் தொகை, அப்பர் சம்பந்தர் இருந்த காலம் என்பவற்றையும் விரிவாக ஆராய்ந்து மாணிக்கவாசகர் காலத்திட்ட முடிபு செய்கின்றார்.

கடைச்சங்க காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் முடிந்தது. அதனையே உயர்மதிற்கூடலின் ஆய்ந்த ஒண்தீந் தமிழின் துறை என்று மாணிக்கவாசகர் திருச்சிற்றம்பலக் கோவை (20)யில் பாடினார். அவர் பாடிய சங்கம் பின்னர் எழுந்த சமண சங்கம் அன்று (597)

தொல்காப்பியர் குறிக்கும் கொடிநிலை, கந்தழி, வள்ளி என்பன கதிரும் தீயும் திங்களுமே யாம் (656) பண்டைத் தமிழர் இவற்றை வணங்குதற் குறியாக அம்மூன்றின் வடிவு போன்ற குண்டங்கள் வெட்டுவித்து வேள்வி வேட்டனர். (663)

இந்நாளைத் தமிழர் ஆங்கிலர் வழிப்பட்டமை போலவே, அந்நாளைத் தமிழருள் பலர் ஆரியர் வழிப்பட்டு அவர் ஒழுகலாறு களைக் கொண்ட தமிழ் வழக்குக்கு முழு மாறாய் நின்றனர்.(694)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/261&oldid=1578391" இலிருந்து மீள்விக்கப்பட்டது