66
மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்
237
நூலே கரகம்” என்னும் நூற்பாவில் குறிக்கப்பட்ட நூல், கலை நூலே அன்றிப் பூணூல் அன்று (707)
ல
இ
உயிர்களை வகையால் (வளி, தீ, நீர், மண்) நால்வகைப்பட வகுத்துக் காட்டுதலேயன்றி, அறிவு வகையால் ஆறாகப் பகுத்துக் காட்டுதல் சமணர் கருத்தாதல் கண்டிலம் (718) விசும்பு ஒன்று உள்ளமை ஆங்குக் குறிக்கப் படவில்லை. (720)
புத்த சமண ஆசிரியர்கள் தாம் இயற்றும் நூல்களின் முகப்பில் புத்தனையும் அருகனையும் L வணங்காதிரார். தொல்காப்பியத்தில் அவ்வாறு வணக்கம் இல்லாமையொடு அவற்றைப் பற்றிய ஒரு சிறு குறிப்புத்தானும் காணப்பட வில்லை (722)
இற்றைக்கு இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பரிபாடலில் காணப்படும் சகடம், சடை, சண்பகம், சமம், சமழ்ப்பு, சமைப்பின் எனச் சகர முதற்றமிழ் மொழி களையும், ஞமன் என்னும் ஞகர முதற்றமிழ் மொழியினையும், தமிழில் வாரா என்ற தொல்காப்பியர் கி.மு. முப்பதாம் கி.மு.முப்பதாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் ஆவர் (724)
சிலப்பதிகார மணிமேகலைப் பெருந்தமிழ்ப் பாட்டுடைச் செய்யுட்கள் இயற்றப்பட்ட காலத்தை வகுத்தற்கும் கடைச்சங்க காலத்தை வகுத்தற்கும் நுறுங்காவைரவாள் போல் நின்று உதவுவது இலங்கை மன்னன் முதற்கயவாகுவின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பதாம் (802)
திருமுறை கண்டபுராணம் நுண்ணிய உண்மை யாராய்ச்சியில் தலை நின்றவரும் சைவசித்தாந்த ஆசிரியரில் நாலாம் எண்ணு முறைக்கண் நின்றவருமான உமாபதி சிவாசிரியர் செய்தது ஆகாது. அவர் பெயர் தாங்கிய வேறெவரோ ஒருவர் செய்ததாகல் வேண்டும் (818)
வீரசைவம் :
கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் ஈற்றில் வடுக நாட்டில் இருந்து தமிழ் நாட்டிற் குடிபுகுந்து வைகிய வீர சைவ மரபினர் பலருள் பாண்டிய நாட்டில் வைகிய ஒரு தெய்வப் பார்ப்பனக் குடியிலிருந்து மாணிக்கவாசகர் தோன்றினமையால் போலும்