238
மறைமலையம் - 7
அவரை வீர சைவச் சான்றோர் முதலாசிரயராய்க் கொண்டு வழிபாடு செய்து வருவாராயினர். அதனால் சைவசமய குரவர் வரிசையில் வைத்துக் கொண்டாடிற்றிலர். இதனாலேதான் சுந்தரமூர்த்தி நாயனாரும் அவரது திருப்பெயரை விளங்கக் கூறாது பொய்யடிமை இல்லாத புலவர் எனச் சிறிது மறைத்துக் குறிப்பால் கூறினார். வீர சைவமும் சைவரும் ஒரு சமயமே என உண்மை கண்டு உறவு கலந்தபின் மாணிக்கவாசகரையும் நாலாம் சைவ சமயாசிரியராக ஒருப்பட்டுக் கொள்ளும் பெரும்பேறு பெறலாயினர் (821-22) திருவிடை மருதூர் மும்மணிக் கோவையிலே தான் முதன்முதலில் மாணிக்கவாசகப் பெருமான் ஏனை மூவரோடு சேர்த்து நாலாமவராகச் சொல்லப்பட்டிருக் கின்றார்.
66
“வித்தகப் பாடல் முத்திறத் தடியரும்
திருந்திய அன்பிற் பெருந்துறைப் பிள்ளையும்”
என்று பட்டினத்தார் கூறுவதால் அவர் காலத்திற்கு முன், முதல் மூவருமே சைவ சமய ஆசிரியராய்க் சமய ஆசிரியராய்க் கொள்ளப்பட்டனர் என்பதும், அவரது காலத்திலேதான் மாணிக்கவாசகர் நாலாமவராக வைக்கப்பட்டார் என்பதும் விளங்கும், (823-4)
க
ஆரிய நூல் வைப்பு முறை வேதம், உபநிடதம், ஆகமம் என நின்றாற் போலவே தேவாரத் திருப்பதிகங்கள் தமிழ் வேதங் களாகவும், திருவாசகந்திருக்கோவையார் என்பன தமிழ் உபநிடதங் களாகவும், திருமந்திரம் தமிழ் ஆகமமாகவும் ஒன்றற்குப்பின் ஒன்றாக வைத்து முறைப்படுத்தப்பட்டு நிற்கலாயின (860). அவர் வட நாட்டின்கண் இருந்து வந்த மரபினர் என்பது" மகேந்திரம்’ என்பதைப் பயில வழங்கலாலும் சில சொல்லாட்சிகளாலும் விளங்கும் (861-862)
அவர் வீர சைவராய்ச் சிவலிங்க அருட்குறியைத் தம் திருமேனியில் அணிந்திருந்தார் என்பது எந்தையே ஈசா உடல் இடங் கொண்டாய் “என் மெய்ந் நாடொறும் பிரியா வினைக்கேடா” என விளங்கக் கூறுமாற்றால் அறியப்படும் (865) கடல் அகற்சி
மாணிக்கவாசகர் காலத்தே தில்லைநகரின் அருகே கடல் நின்றது என்பதூஉம் திருஞான சம்பந்தர் காலத்தே அக்கடல்