பக்கம்:மறைமலையம் 7.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

243

எழுநூற்றுப் பன்னிரண்டு பெரியார் பற்றி வரைந்த வரலாற்றைச் சுட்டுகிறார்.

-

6

ள்

132 ஆண்டு, 162 ஆண்டு, 150 ஆண்டு, 140 ஆண்டு, 112 ஆண்டு, 180 ஆண்டு என வாழ்ந்த பெருமக்களை எடுத்துக் காட்டுவதுடன், “நீண்ட நாள் உயிர் வாழ்வது எப்படி? என்பதைத் தம் வாழ்வியல் முறையோடு விளக்கிய பெருமக்களையும் சான்றுகளுடன் விளக்குகிறார் அடிகளார்.’

ஆண்டு முதிர்ந்தமையால் உடம்பு தளர்ந்த நிலைக்கு வந்தாலும் அது பற்றி மனக்கிளர்ச்சி குறையாமல் இந்நூலில் நம்மாற் சொல்லப்படும் முறைகளை வழுவாது பின்பற்றி நடப்பார்களானால் திரும்பவும் தமதுடம்பை உரம்பெறச் செய்து எல்லா மக்களும் இனிது வாழ்வர் என்பது திண்ணம் என உறுதி சொல்கின்றார்.

இயற்கையாக உண்டாகும் இடி, மின்னல், மழை, தீ, நில அதிர்ச்சி, பாம்பு, புலி இன்னவற்றால் ஏற்படும் எதிர்பாராத் துயர்களையும் அருளொளியில் அழுந்தி நிற்கும் அறிவால் வருமுன்னே விலக்கிக் கொள்ள முடியும் என்பதைத் தம் வாழ்வியற் சான்றுகொண்டு விளக்குகிறார் அடிகளார் : வருமுன் விலக்கல் :

ஒருமுறை யாம் பலமனேரி யென்னும் ஊரிற் குறுங்காட்டின் நடுவிலுள்ள மாளிகை ஒன்றில் தங்கி யிருக்குமாறு நேர்ந்தது. ஒருநாள் இரவு அதில் யாம்படுத்து உறங்குகையில் ஒரு பாம்பு வந்து எமது கையிற் கௌவுவதாகக் கனவு கண்டு சடுதியில் விழித்துப் பார்க்க, உண்மையாகவே ஒரு கரும்பாம்பு எமது வலது கைம் மேற்புறத்தைக் கெளவிப் பல்லை அழுத்தும் நிலையில் இருந்தது. உடனே அதனைத் தப்பி அப்புறம் எழுந்து போய் உயிர் பிழைத்தேம்.

L

மற்றொரு முறை திருநெல்வேலியில் ஒரு வீட்டில் தக்கார் பலரொடு நல்லுரைபேசிக் கொண்டு சுவர்மேற் சாய்ந்து உட்கார்ந்திருந்தேம். அவ்வாறிருக்கையில், அந்தச் சுவரின் அடியில் ஒரு தேள் இருப்பதாக எமக்குச் சடுதியிலே ஒரு நினைவு தோன்றிற்று; உடனே பேச்சை நிறுத்தி அப்புறம் நகர்ந்து திரும்பிப் பார்க்கப் பெரிய கருந்தேள் ஒன்று எமக்குப்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/268&oldid=1578398" இலிருந்து மீள்விக்கப்பட்டது