244
―
மறைமலையம் 7
பின்னே இருந்தது; அதற்குத் திருவருள் உதவியால் தப்பிப் பிழைத்தேம். இங்ஙனம் யாம் தப்பிப் பிழைத்து வருகின்ற நிகழ்ச்சிகள் பல உண்டு" என உள்ளொளியால் உணரப்படும் பாதுகாவலை உரைக்கிறார்.
மூச்சுப் பயிற்சி :
பிராணவாயு என்பதை உயிர்க்காற்று என மொழியாக்கம் செய்கிறார் அடிகளார். உடம்பைப் பாதுகாத்தற்கு வேண்டி முதற் பொருள்கள் அத்தனையும் பிராண வாயுவிலேயே இருக்கின்றன என்கிறார்.
ண
நாற்றக் காற்றால் நுரையீரல் சுருங்கிப் போய், அப்படியே சுருக்கமாகி நின்றுவிடும் என்பதை நுரையீரலுக்கு வந்த தீங்கு என்கிறார்.
சிராசு உத்தௌலா என்பவன் ஆங்கிலரொடு பகை கொண்டு அவர்களுள் நூற்று நாற்பத்தாறு பேர்களைப் பிடித்துப் பதினெட்டடி நாற்பக்க அளவுள்ள ஓர் இருட்டறையில் ஒருநாள் இரவு சிறை வைத்து, மறுநாட் காலையில் பார்க்க இருபத்து மூன்று ருபத்து மூன்று பேர் மட்டுமே கொத்துயிரும் கொலையு யிருமாய்க் கிடந்தார்கள்; மற்ற நூற்று இருபத்து மூன்று பேரும்பிணமாகக் கிடந்தனர் என்னும் வரலாற்றுச் சான்று காட்டி மூச்சுக் காற்றின் தூய்மை இன்றியமையாமையை விளக்குகிறார் (20)
மக்களின் மூச்சு மூச்சு ஓட்டத்தால் உண்டாகும் நச்சுக் காற்றானது பகற் பொழுதைக் காட்டிலும் இரவுப் பொழுதில் மிகுதியாகும் என்பதைப் "பகலவன் பகலவன் வெளிச்சம் ளிச்சம் உள்ள பகற்காலத்திற் புற்பூண்டு மரஞ் செடி கொடி முதலான நிலையியற் பொருள்கள் நச்சுக் காற்றை உள்ளே இழுத்துத் தூய உயிர்க்காற்றை வெளியே விடுகின்றன; வெயில் வெளிச்சம் இல்லாத இராக்காலத்திலோ புற்பூண்டு முதலியன உயிர்க் காற்றை உள்ளிழுத்து நச்சுக் காற்றை வெளிவிடுகின்றன” என விளக்குகிறார்.
மக்கள் உறங்கும் போது விளக்குகள் எரியுமானால் அவர்களது உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத தூய காற்றை அவை இழுத்துக் கொண்டு அவர்களுக்குத் தீமையை விளைக்கும்