பக்கம்:மறைமலையம் 7.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

மறைமலையம் - 7

இந்நூலைப் பற்றிய குறிப்புரை...

காளிதாசரின் காலம், திறன் ஆகியவற்றை இந்நூலில் அடிகளார் ஆராய்ந்துள்ளார். நாடக இயல்பு, நாடக வரலாறு, நாடக அமைப்பு, நாடகக் கதை யமைப்பு, நாடக மாந்தர் இயற்கை. கதை நிகழும் இடமும் காலமும், நாடக அமைப்பிற் காணப்படும் சில குறைபாடுகள், காளிதாசர் காலப்பழக்க வழக்கங்கள் எனப் பல கூறுகளாகச் சாகுந்தல நாடக ஆராய்ச்சி அமைந்துள்ளது.

இந்நூலின் நாடகக் கலை தனித்தும் ஒப்பீட்டு நிலையிலும் ஆராயப் பெற்றுள்ளது.

முன்னை நாள் நல்லிசைப் புலவர்கள், உலகியற்கை, மக்கள் இயற்கைகளின் உண்மை வனப்புகளை உணர்ந்து உணர்த்தும் மெய்யறிவு மேன்மை மிக்கவர்கள். இத்தகு இயல்பினால் இளங்கோவடிகள் சிறந்த நல்லிசைப் புலவராகவிளங்குகிறார். காளிதாசரின் முதிர்ந்த புலமையும், நாடக நூல் நுட்பங்கள் நன்குணர்ந்த உணர்வும் குறிப்பிடத்தக்கன வாகும். இவ்வாறு அடிகளாரின் சாகுந்தல நாடக ஆராய்ச்சி அறிவு நலம் பெருக்கும் அரிய ஆராய்ச்சியாகும். அழகிய இனிய எளிய தமிழ் நடையையும் இந்நூல் கொண்டு விளங்குகிறது.

- டாக்டர் நா. செயப்பிரகாசு மறைமலையடிகள் இலக்கியப்படைப்புகள் (பக். 19)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/27&oldid=1577849" இலிருந்து மீள்விக்கப்பட்டது