மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்
245
நச்சுக் காற்றை மேன்மேல் வெளிவிடுமாதலால் அதனை உள்ளிழுத்து அவர்கள் தமதுடம்பின் நலத்தை இழந்து போவார்கள். இதனாற் போலும் தலைமாட்டில் விளக்கை எரியவிடலாகாது என்று வீடுதோறும் வழங்கி வருகின்றார்கள், எனப் பழநாள் வழக்கின் நலத்தை விளக்குகிறார்.
உ
தடிப்பான பொருள்களையெல்லாம் நிலமானது தன்னி டத்தே இழுக்கும் தன்மை உடைமையினால்நச்சுக் காற்றானது எப்போதும்நிலமட்டத்தில் உலவிக் கொண்டிருக்கும். உயிர்க் காற்றோ நொய்ய பொருளாகையால் நிலமட்டத்திற்கு மேல் உலவிக் கொண்டிருக்கும், இந்த ஏதுவினால் நிலத்தின்மேல் படுப்பதைக் காட்டிலும், கட்டிலின்மேற்படுப்பதே மிகவும் நல்லதாகும்.
மூச்சுப் பழக்கம் பற்றிச் சொல்லும் அடிகள் நூறு ஆண்டும் அதற்கு மேலும் உயிர் வாழ விரும்புகின்றவர்களுக்கு இந்த நூலிற் சொல்லப்படும் ஒவ்வொரு பொருளும் விலையிடுதற்கரிய மாணிக்கங்களாகவே தோன்றும். இந்த நூலில் எம்மால் எடுத்துச் சொல்லப்படும் பொருள்கள் எளிதிற் கிடை டைப்பன ப்பன அல்ல; ஆகையால் நெடுங்காலம் உயிரோடு இருந்து பயன்பெற வேண்டும் நண்பர்கள் இவற்றை மனத்தின் கண் ஊன்றிப் பெறுதற்கரிய பெரும்பயனைப் பெறுவார்களாக! பின்னே சொல்லப்படும் பொருள் மிகவும் உன்னிற்கற்பால தொரு முழு மாணிக்கமாகும்; நன்றாக உற்றுணர்க என மூச்சுப் பழக்கம் பற்றி உரைக்கிறார்.
உயிர்க்காற்றுச் சிறிது நேரம் வலமூக்கில் ஓடிவரும்; அப்புறஞ் சிறிது நேரம் இடமூக்கில் ஓடி வரும். அப்புறம் ஒரு சிறிது நேரம் இரண்டு மூக்கிலும் ஓடி வரும். இங்ஙனம் மாறிமாறி ஓடி வருதலும், ஒப்ப ஓடி வருதலும் ஏன் என்று துவரையில் நீங்கள் ஆராய்ந்து பாராவிட்டாலும், இவ்வுண்மையை நாம் தெரிவித்த பிறகேனும் இஃது ஏதோ ஒரு பெரும்பயன் தருதற்காகவே இவ்வாறு ஓடி வருகின்றதென உங்கட்குத் தோன்ற வேண்டும் அல்லவா என அதனை ஆழமாக வினாவி விளக்கம் புரியும் அடிகள், அப்பயிற்சியை வாயளவில் அல்ல ஏட்டளவில் சொல்வாரல்லர்; தம் உடலையே ஆய்வுச் சாலையாகக் கொண்டு தாமே ஆய்வா ளராக இருந்து நுணு