பக்கம்:மறைமலையம் 7.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

மறைமலையம் - 7

உடலுழைப்பு மிகுதியாய் உள்ளவர்கள் குளிர்ந்த நீரும் மூளையுழைப்பு மிகுதியாய்ச் செய்பவர்கள் வெந்நீரும் பருகுதல் வேண்டும் என்பதை விளக்குகிறார்.

ஒரு முறையில்அரைக்கிண்ணத்திற்கு மேல் நீர்பருகுதல் ஆகாது என்றும், அந்நீரையும் சிறிது சிறிதாக உறிஞ்சி வாய் நீரோடு கலந்து சுவை பார்த்துக் குடித்தல் வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

கதிரவன் எழும் முன்னும் மறைந்த பின்னும் நீராடுதல் நன்றென்று கூறுதல் உலக இயற்கையில் நிகழும் மாறுதல்களை அறியாமற் சொல்லுவதாகலின் ஏற்கத் தக்கதன்று என்கிறார்.

ஓடும் நீரில் மின்கலப்பு உண்டு ஆதலால் அந்நீரில் குளித்தலே நலமாம். கட்டுக்கிடை நீரில் குளித்தல் ஆகாது என்கிறார்.

உணவு : உணவு, பற்றி விரிவான ஆய்வு செய்யும் அடிகளார், அறிவியலார் பகுத்த வகையில் முதலுணா, கொழுப்புணா, இனிப்புணா, உப்புணா, நீருணா எனக் கூறுகிறார். இவை Protein, Fato, Corbo, - hydrates. salts. water என்பவற்றுக்கு அடிகளார் கொண்ட மொழியாக்கங்களாகும். அவ்வாறே Chlorids, Phosphate of lime, Vitamins என்பவற்றைப் பசுமஞ்சள், எரிகந்தச் சுண்ணம், உய்வனவு அல்லது உய்வுறை என மொழியாக்கம் செய்கின்றார்.

இவ்வகையால்

அடிகளார் மொழியாக்கமாகச் செய்துள்ள அறிவியற் கலைச் சொற்கள் மிகப் பலவாம். மறைமலை அடிகளார் தொகுத்த வடசொல் தமிழகராதி, அறிவியற்கலைச் சொல் அகராதி என இருவகை அகராதிகளை உருவாக்கும் வகையில் சொல்லாக்கமும் மொழியாக்கமும் செய்துள்ளார் அடிகளார்.

66

து

உணவு உண்பது உடலைப் பாதுகாப்பதன்று. உண்ட உணவிலுள்ள சாறுகள் அத்தனையுஞ் செந்நீரிற் கலந்து உடம்பிற் சேருவதே அதனை பாதுகாப்பதாகும்" என்றும் மருந்து அறியாமலேயே வெறும்பட்டினி கிடத்தலாலும், மலக்குடரை நாடோறு கழுவிவிடுதலாலும் குறிகளை நீராவியிற் காட்டி நன்றாய் வியர்க்க வைத்தலாலும் எத்துணைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/273&oldid=1578403" இலிருந்து மீள்விக்கப்பட்டது