பக்கம்:மறைமலையம் 7.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

251

படிப்படியே மாறிப்போவர் என்றும், அழகில்லாரும், அழகுடையார் பாராட்டப் பெற்று அப்பதிவு

எனப்

மிக்காராயின் அழகுடையவர் ஆதலும் காணக் கூடியன ஆகலின் மனநிலைக்கும் உடற் பொலிவுக்கும் உரிய தொடர்பு புலப்படும் என்கிறார்.

தம்மைப்பற்றிக் குறைவாக எண்ணும் ஒருவருக்கு அறிவும் முயற்சியும் நீடு இனிது வாழ்தலும் னிது வாழ்தலும் இயலாது. அங்ஙனமே பிறரைப் பற்றிக் குறைவாக நினைக்கும் போதும் அவரது னைவு அக்குறைபாடுகளுள் சிக்குண்டு மேல் நிலைக்குச் செல்ல மாட்டாது கீழ்க்கிடந்து அங்ஙனம் நினைப்பாரையே அழித்து விடுகின்றது என்று இருபாலும் தீமையாம் குறைவுறு நினைவைச் சுட்டுகிறார்.

கோள்நூல் : இது நல்லநாள், இது நல்ல வேளை, இது தீய நாள், இது தீய வேளை என்னும் கோள் நூல் போலியறிவும், அதன் வழித்தான பொய்ந்நம்பிக்கையும் ஒருவர்க்கு ஏறி விட்டால், அவர்வேறு வகையில் எத்துணைச் சிறந்த ஆராய்ச்சியுடைய வராயினும் கோள் நூற்பொய்ம்மை நன்குணர்ந்தவராயினும் அவரைவிட்டு அப்பொய்ந்நம்பிக்கை நீங்குவதே இல்லை என்னும் அடிகளார் அந்நம்பிக்கை உள்ளத்தில் நுழைய விடாமல் செய்தலே நன்றாகும் என்கிறார்.

ஐம்பதாண்டுகள் உடைய ஒருவர் கோள்நூல் பார்க்க, உம் மகன் இன்னான் இருந்தால் உங்களுக்கு ஆறு திங்களுள் இறப்பு நேரும், அவன் இறந்துவிட்டால் எழுபத்திரண்டு ஆண்டு வரையில் வாழலாம் என்று கேட்டவர் அவ்வாறே மகனைச் சாவச் செய்தார்.

ல்

அவரும் இரண்டு திங்களில் இறந்தும் போனார் என்றும் தாம் அறிந்த நிகழ்ச்சியைச் சுட்டும் அடிகளார், கோள் நூலிலும் கோள்நூலார் உரையிலும் வைக்கும் நம்பிக்கையினை விட்டொ ழித்தலே பெரிதும் வேண்டற்பாலதாகும் என்கிறார்.

.

நீள உயிர்வாழ்தலில் வேட்கை உடையவர் முதுமையைப் பற்றியும் சாவைப் பற்றியும் நிகழும் நினைவுகளையும் எண்ணங் களையும் அறவே விட்டொழித்தல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/276&oldid=1578406" இலிருந்து மீள்விக்கப்பட்டது