252
மறைமலையம் - 7
இன்றியமையாது தெரிவிக்க வேண்டி இருந்தால் அல்லாமல் ஒருவர் தமது வாழ்நாள் இவ்வளவாயிற்றென்று தெரிவித்தலும் ஆகாது. அதனை நினைத்தலும் ஆகாது. அதனை யெண்ணி மனங்கலங்குதலும் ஆகாது என நீண்ட வாழ்வுக்கு வழி உரைக்கிறார்.
ஆராய்ச்சியின் நிறைவுரை
தொன்மைக்குத் தொன்மையான மொழியும் புதுமைக்குப் புதுமையானதாகவும் திகழவேண்டும். அந்நிலையே உயிரோட்டமமைந்த ஆற்றின் போக்குப் போல என்றும் வளம் செய்வதாய் அமையும்.
எம் மொழியாயினும் தன் சொற்களைப் போற்றித் தூயதாக வைத்துக் கொள்வதுடன் புதுப்புதுக் கலைச் சொற்களையும் காலந்தோறும் துறைதோறும் பெருக்கிக் கொண்டு வருதல் வேண்டும். அதற்கு அறிவு வல்லார் இடையறவு இல்லாமல் தொடர்ந்து பாடாற்றி வருதல் வேண்டும்.
அயற்சொற்களை அப்படி அப்படியே எடுத்தாண்டு வருவது ஒரு மொழிக்கு ஆக்கமாகிவிடாது. முயற்சியுடைய மக்கள் அந்நெறியை விலக்கி வழிகாட்டுதல் வேண்டும்.
ய
கலைச் சொல்லாக்கமோ மொழிபெயர்ப்போ செய்யுங் கால் தம்மொழியின் இயல்பொடு பொருந்தியதாகவே செய்தல் வேண்டும். ஒலிவகையாலும் வடிவ வகையாலும் மொழியியலை மாற்றி அயன்மொழித் தோற்றத்தை ஆக்கிவிடுதல் ஆகாது.
வை பொதுவகையாக மொழியியலில் அடிகளார் கொண்ட குறிக்கோள்கள்.
அறிவியல் ஆராய்ச்சி வகையில் அடிகளார்,
எத்துறைக்கும் தமிழ்மொழி ஈடு தருவதே என்பதைத் தம் நூல்களாலேயே மெய்ப்பித்துக் காட்டினார். அவ்வகையில், தம்மையே ஆய்வுக் களமாகக் கொண்டு ஆராய்ந்தார். தம்மைச் சார்ந்தாரையும் அவ்வகைக்குப் பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டார். அவ்வத் துறையில் ஈடுபட்ட ஆய்வாளர் செயற்பாடுகளையும் நூல்களையும் ஆழ்ந்து கற்று மெய்ம்மங்கள்