256
மறைமலையம் - 7
சிவனியச் சீர்மையும் செம்மையும் நோக்கிச் "சாதி வேற்றுமையும் போலிச் சைவரும், வேளாளர் நாகரிகம், தமிழ் நாட்டவரும் மேல் நாட்டவரும் முதலான நூல்களையும் கட்டுரைகளையும் வரைந்தார். "சிவஞான போத ஆராய்ச்சி என்னும் நூலைத் தொடங்கி முற்றுவிக்காமல் நின்றது.
நாடெல்லாம் சென்று அடிகள் செய்த பொழிவுகளுள் பெரும்பாலான சிவனியச் சார்பின. அவை எழுத்துருவிலும் வெளிப்பட்டன.
அடிகளார் மக்கள் பெயர்கள் நீலாம்பிகை, திருஞான சம்பந்தன், மாணிக்கவாசகன், திருநாவுக்கரசு, சுந்தர மூர்த்தி, திரிபுர சுந்தரி என்பனவாம். இப்பெயர்களும் இவர்களின் மக்கள் பெயர்களும் சிவனியப் பெயர்களாக இருத்தல் அடிகளின் உட்கிடையை விளக்கும்.
ப
அடிகளார் பொன்னினும், மேலாகப் போற்றிய நூலகத்திற்கு "மணிமொழி நூலகம் என்பது பெயர்.“டெடில் மெசின் (T.M.) அச்சகம் என்னும் பெயருக்கு உரிமம் பெற்றிருந்தும், அதனைத் “திருமுருகன்” அச்சகம் என்று அமைதி கண்டவர் அடிகள்.
அம்மை அம்பலவாணர் வழிபாட்டை உயிர்ப்பாகக் கொண்டு ஊன்றி நின்றவர் அடிகள். தாம் வாழிடத்து மேலிடத்தை அம்மை அம்பலவாணர் வழிபாட்டுத் திருமாடம் ஆக்கியவரும் அடிகள். இவ்வெல்லாம் அடிகளாரின் சைவச் சார்பினைச் சாற்றுவன.
சமயக் காழ்ப்பர் நிலை :
ஒரு சமயக் குடிவழியர் - பற்றாளர் - வழிபாட்டாளர், பிற சமயச் சார்வுக்கு இடம் தருவதில்லை. பிற சமய நூல்களைக் கற்றலும் கேட்டலும் கொள்ளார்; பிற சமயச் சால்பினை மேற்கொள்ளல் அரிது.
கோழியைப் பாடும் வாயால் குஞ்சினைப் பாடுவேனோ அப்பனைப் பாடும் வாயால் சுப்பனைப் பாடுவேனோ" என்று சிவ - முருக வழிபாட்டிலும் வேற்றுமை கண்டோர்களாலேயே, அறுவகைச் சமயங்கள்” உருவாகின.
66