66
மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்
257
'தான் வழிபடும் இறைவன் பெயர் தவிர மற்றை இறைவன் பெயர், தன் காதில் விழுதலும் ஆகாது; பிற சமயக் கோயிலும் உருவும்கண்ணில் படுதலும் ஆகாது; அத்தெய்வப் படையலைக் காள்ளலும் ஆகாது” என்று முரட்டு வெறியராய் இருந்தாரும் உளர்.
உருவ வணக்கம் இழிந்த தென்றும், அதனைக் கொள்வார் அறிவிலார் என்றும் நாளெல்லாம் பழித்த சமயத்தரும், “யாதொரு தெய்வம் உலகுக்கு மாதொரு பாகனை அன்றி” என்று வீறு பேசியும், “பொய்த் தேவு பிற எல்லாம்; எம்மதே மெய்த்தேவு" என்று தருக்கியும் நின்றாரும் உளர்.
சமயச் சால்பர் அடிகள் :
இவ்வாறு யாம் பிடித்ததே பிடி. கொண்டதே கொள்கை என்னாமல், பல்லபல சமயங்களையும் ஆய்ந்து நல்னவெல்லாம் நடைமுறைக்காவன என்று மேலேறி நின்ற சான்றோர்களும் உளர். அத்தகு சான்றோருள் ஒருவராக மறைமலையடிகளார் திகழ்ந்தார். கந்த கோட்டம், திருத்தணிகை, திருத்தில்லை என்றெல்லாம் திருக்கோயில் வழிபாட்டில் திளைத்த வள்ளலார் பெருமான், “என் மார்க்கம் சன்மார்க்கம்; அதுவே உலகுக்கு நன்மார்க்கம்” என்று, ஏறுதற்கு அரிய மலை முகட்டிலே ஏறி நின்று மாயா மணி விளக்கம் காட்டிய சீர்மையைச் சிந்தையில் காண்ட மறைமலையடிகளால், பல்லவபுரத்தில் தாம் வாழ்ந்த திருமனையில், சமரச சன்மார்க்க நிலையம் என்னும் அமைப்புக் கண்டு ஆருயிர்ப் பணி செய்தமை சமயச் சார்பு கடந்து, சமயச் சார்பு மல்கி பெருந்தக்க நிலையாகும். அந்நிலையமே அடிகளார்க்குத் தனித் தமிழ் உணர்வு தோன்றிய பின்னர்ப் பொது நிலைக் கழகம் என்னும் பொருந்திய பெயர் கொண்டு அருந்திறல் செயல்கள் ஆற்றியது.
காலச் சூழல்
L
அடிகளாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர், பல் சமய ஆய்வாளர், பல் சமய ஊடகங் கண்டு அதிலே தோய்ந்து தோய்ந்து உரையும் பாட்டும் க்கிய தோன்றல். சீர்திருத்தத் தொண்டிலே சிந்தை ஒன்றியவர்,