பக்கம்:மறைமலையம் 7.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

66

24-6-1903

5-6-1905

13-6-1905

மறைமலையம் - 7

சைவ சமயமே சமயம்” என்று உரையாற்றினேன்.

பாலகங்காதர திலகரின், வேதம் பற்றிய நூலைப் படிக்கத் தொடங்கினேன்.

விவேகானந்தரின்

ஞானயோகம் வாங்கிப் பயின்றேன். நுண்ணியவையாகவும் அருமையாகவும் இருந்தன.

2-12-1905 ஈசோப நிடதத்திற்குத் தமிழ் விளக்கவுரை எழுதி முடித்தேன்.

15-4-1906 இவ்வாண்டில் நான் செய்த அருஞ்செயல் சைவ சித்தாந்த மாநாட்டைக் கூட்டியதேயாம்.

22-12-1906 பிராணாயாமம் பற்றிய உரையை எழுதினேன். 27-1-1907 தவத்திரு. இராசானந்த சுவாமிகள் எனக்கு நிட்டை அருளினார்.

27-11-1907

சிவஞான போதத்துக்கு உரை எழுதத் தத்துவ நூல்கள் பல வாங்கி வருகிறேன்.

10-8-1909 ஈசனும் உமையுமே என்ற கருத்தில் நம்பிக்கை இழந்து விட்டேன்.கடவுளிடம் வேண்டுவதன் மூலம் மாற்றப்பட முடியாத நிலைபேறுடைய விதி

14-1-1910

6-8-1910

பேரண்டத்தில் உள்ளது. மேன்மை பெற்ற

ஆன்மாக்களான கடவுளரால் மனிதர்க்கு ஏதேனும் செய்ய முடியும் என்று எனக்குத் தோன்ற வில்லை. அனைத்தும் நம் முயற்சியையே சார்ந்துள்ளது. வேதாந்த சூத்திரங்களுக்குரிய நீலகண் பாடியத்தைக் கற்கத் தொடங்கினேன். மொழி பெயர்ப்பாளர் செந்திநாத அய்யர்க்குத் தமிழ்ச் சைவர் கடப்பாடு உடையர்.

விவேகானந்தரின்

"கர்ம யோகம் என்னும்

ாரு

அருமையான நூலைப் படித்தேன். இரண்டெ கருத்துக்கள் தவிர விவேகானந்தரின் பொழிவுகள் நெஞ்சை உருக்கும் தன்மையவாய்ச் சைவ சித்தாந்தக் கருத்துக்களுடன் ஒத்துள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/285&oldid=1578415" இலிருந்து மீள்விக்கப்பட்டது