பக்கம்:மறைமலையம் 7.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

261

31-1-1911 மார்ச்சு 31 உடன் பணிக்காலம் முடியும் என்ற செய்தி, துறவறம் பெறலாம் என்ற எண்ண முடை யவனாக இருப்பினும் சிறிது கலக்கத்தைத் தந்தது.

25-6-1911

27-8-1911

2-2-1912

திருக்கழுக்குன்றப் பூசாரிகள் சொல்வது போல் கழுகுகள் காசியில் இருந்து வரவில்லை. அருகில் இருக்கும் குன்று களில் இருந்தே வருகின்றன. அவை பழக்கப் படுத்தப் பட்டவை என்று எண்ணுகிறேன். துறவிக்குரிய துவாராடைபுனைந்தேன்.

24-12-1911 சமரச சன்மார்க்க நிலையம் ஏற்படுத்தினேன். இராமலிங்க அடிகள் சபையில் (வடலூரில்) சன்மார்க்கம் பற்றிப் பேசினேன். அடிகள் ஏற்படுத்திய முறைகளையே மீறிச் சடங்குகளை வேண்டுமென்றே சில வைதிகர்கள் தந்நலத்துக்காக நுழைத்தனர் என்று கடிந்து பேசினேன்.

26-3-1912

3-4-1912

24-1-1913

16-4-1913

விவேக பாநுவில் என்னை மறைமுகமாகக் கண்டித்து எழுதிய ஒருவருக்கு மறுமொழியாகச் சாதி வேறுபாடு களைச் சாடிக் கட்டுரை எழுதி வருகிறேன். சாதி முறையை அழித்து மனிதரிடையே சமன்மை கொண்டு வர வேண்டும் என்பதே என் விழைவு. என் எளிய முயற்சிகளுக்கு அருளட்டும்.

ஈசன்

போலிச் சைவரும் சாதி வேறுபாடும் என்னும் கட்டுரை எழுதி முடித்தேன்.

மேட்டுக்குப்பம் சென்றேன். இராமலிங்க அடிகள் முன்னாளில் அமர்ந்த புனித அரங்குக்குச் சென்றதும் உளம் நெகிழ்ந்து கண்ணீர் பெருகிற்று. என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டேன். கல்கத்தாவில், "சாங்கியமும் சித்தாந்தமும்” என்னும் பொருள் பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/286&oldid=1578416" இலிருந்து மீள்விக்கப்பட்டது