பக்கம்:மறைமலையம் 7.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

6.8.43

19.1242

  • மறைமலையம் - 7×

தாங்கள் எல்லா நலங்களுடனும் இனிது நீடு வாழ நம் நாகூர் ஆண்டவரும் அருள் செய்வாராக.

கோடி கோடியாக ஊரார் கல்வி வளர்ச்சிக் கென்று தந்த பொருளை வைப்பாட்டி மார்க்கும் தாசி வேசிகட்கும் கொலை வழக்கு கட்கும் வாரி இறைத்துக் கொண்டு, கல்விக்கும் மற்றோர்க்கும் நூல் எழுதுவார்க்கும் ஏதோருதவியும் செய்யாத மடாதிபதிகளாகிய துறவி களைப் பருத்த அவமானமாகக் கருதுவாரும் எவரும் இல்லையே. எல்லாரும் அவர் காலிற் போய் விழுந்து அவர் வீசும் எச்சிற் சோற்றையுண்டு அவரைப் புகழ்ந்து பாடியும் ஈதன்றோ கடியத் தக்க பேரவமானச் செயல். ஒழுங்கான முறையில் மனைவி யோடிருந்து சிவத் தொண்டு செய்யும் முறையே ஒழுங்கான துறவு நிலையாகும்.

வருகின்றார்களே.

இன்னவாறான கடிதச் செய்திகள் அடிகளாரின் சமயச் சால்பையும் சீர்திருத்த நோக்கையும் மெய்த்துறவையும் சுட்டு வனவாம்.

66

சைவ சமயம்” வடநாட்டில் இருந்து தென்னாடு வந்தது என்றும், வடமொழி வேத நூல்களில் இருந்து, தென்மொழிக்கு வந்தது என்றும் கூறுவார் இருந்தனர். அதன் உண்மையை ஆராய்ந்த அடிகள்.

66

"ஆரியச் சிறு தெய்வ நூல்கள் சைவ சமய நூல்கள் அன்று” என்கிறார். மேலும் “சைவ சமயக் கொல்லா விரதம், சிவ அடை யாளம், சிவமந்திரம், சிவமூர்த்தம் (சிற்றம்பலம், கூடலாலவாய்) திருக்கோயில், மும்மல இலக்கணம், தத்துவம், உயிர்ப்பாகுபாடு இன்னவை இருக்கு (வேத) நூலில் எட்டுணையும் இல்லை” என்கிறார் (உரைமணிக்கோவை - சைவ சமயத்தின் நெருக்கடியான நிலை 147)

இறை,

உயிர், தளை, என்னும் முப்பொருள் கொள்கைகளும் தமிழ் வழியவே என்பதைத் தொல்காப்பியம்

கொண்டு நிறுவுகிறார் அடிகளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/289&oldid=1578419" இலிருந்து மீள்விக்கப்பட்டது