மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்
265
வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூல் ஆகும், என்பதால் இறையுண்மையையும், “ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறி வதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே”
என்பதால் உயிருண்மையையும்,
“நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்”
என்பதால் உலகு உண்மையையும் ஆசிரியர் தொல்காப்பிய னார் உரைத்தார் என்பதைக் குறிப்பிட்டுச் சிவனிய நெறி தமிழ் நெறியே என்பதை மெய்ப்பிக்கிறார். (பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்)
இனிக் “கடவுள் நிலை" என்பது எது என்பதையும் அடிகளார் சுட்டுகிறார்.
1.
2.
3.
4.
5.
உலகோர் அனைவரும் “கடவுள் ஒருவர் உண் என்னும் கொள்கையர்.
உடல் உலகு உலகப் பொருள்கள் ஆகியவற்றை உண் L டாக்கிய ஒன்று உண்டு என்னும் கொள்கையர். உயர்ந்த படைப்பாளியைக் கண்டு மகிழக் கருதுவார் போலக் கடவுளைக் காணும் வேட்கையினராக
உள்ளனர்.
கடவுளை வணங்குவோருள் அச்சத்தால் வணங்கு வோர், அன்பால் வணங்குவோர் என இருதிறத்தார். அழியாப் பேரின் பத்தில் இருத்தவே, இறையை வணங்கக் கற்பித்தனர்.