266
6(H)
(ஆ)
(F-T-)
மறைமலையம் - 7
சிவபெருமானை அன்றிச் சிற்றுயிர் வடிவங்களைச் செய்து வழிபாடு செய்தல் பெரிதும் குற்றமாகும்.
அரசனை வணங்காமல் அவனால் ஒறுக்கப்பட்ட குற்றவாளிகளை வணங்குவது போன்றது சிறு தெய்வ வழிபாடாகும்.
அதற்குப் பலியிடுவது, தம்மில் வலிமை குறைந்தவர் களைக் கொள்ளையிட்டு
அரசனால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை அரசனாகக் கருதிப் படைத்து அரசன் பகையைத் தேடிக் கொள்வது போன்றதாகும்.
L
சைவராய்ப் பிறந்தார் சிறுதெய்வ வணக்கத்தையும் உயிர்ப்பலியையும் விடுத்துப், பிறரும் விடுக்கும் பணி செய்வாராக”
என்பவற்றை விளக்கி வரைகிறார் கடவுள் நிலை.
-
அறிவுரைக் கொத்து;
“கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா என்பதையும் வலியுறுத்தி எழுதினார் அடிகள்:
உயிர்ப் பிறவி நோக்கு, அறியாமை நீக்கமும் அறிவுப் பேறு அடைதலுமாம்.
தவம் என்பது உயர்ந்த பொருளில் நமது கருத்தை ஒருமுகப் படுத்தி உறைத்து நிற்றல்.
கடவுள் என்பது உலகும் உயிரும் கடந்து நிற்பது. அது இடம் காலம் பொருட்டன்மை கடந்து நிற்பதுமாம்.
என்பவற்றையும் விரிவுற விளக்கும் அடிகள்.
“விலங்கின் புணர்ச்சியைக் கண்டு வரம்பு கடந்து காமங் கொண்ட ஓரிழிஞனால் வடமொழியில் கட்டப்பட்ட கதையே யானை வடிவில் பிள்ளையார் பிறந்தார் என்னும் கதை” என்று கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகளைத் துணிவுடன் கண்டிக்கிறார்.
இயற்கையொடு பொருந்திய புனைவே கதைநூலிலும் வேண்டும் என்பவர் அடிகள். சாகுந்தல நாடக ஆய்வால்
க