பக்கம்:மறைமலையம் 7.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

267

வெளிப்படுத்துகிறார் : "இயற்கைக்கு முழுமாறான நிகழ்ச்சி களை ஆசிரியன் இந் நாடகக் கதை நிகழ்ச்சியின் நடுவே புகுத்தியிருப்பது இதனைப் பயில்வார்க்கு உண்டாம் இன்ப உணர்வினைச் சிதைப்பதாயிருக்கின்றது. சகுந்தலை துசியந்த மன்னனை முறையில் மணந்து கருக் கொண்டிருக்கும் செய்தியினை வானின்கட் டோன்றிய ஒரு தெய்வ ஒலி, அவள் தந்தை காசிபருக்கு அறிவித்த தென்னும் புனைந்துரை, பயில்வார்க்கு மகிழ்ச்சி தருவதாய் இல்லை. அவரு தோழிமார் வாயிலாகவே அச்செய்தி அவரது செவிக்கு எட்டியிருக்க வேண்டும். இச்சிறு நிகழ்ச்சிக்கு ஒரு தெய்வ ஒலியினைக் கொணர்ந்து மாட்டியது நாகரிக அறிவின்பாற் பட்டதாய் இல்லை” என்கிறார். இத்தகைய நோக்கினராகிய அடிகளார் சிவனியப் புராணங்களையும் ஆழமாக ஆய்ந்து கருத்துக் கூறுகிறார்:

புராணங்கள் என்பன, பொதுமக்கட்கு

இறைவன்

உயர்ந்த வரம்பிலா

அறிவில்லாப்

ஆற்றலையும்

அடியாரைக் காக்கும் அருட்டிறங்களையும்) உணர்த்துதல் வேண்டி இரக்கமுள்ள சான்றோரால் கட்டி வைக்கப்பட்ட பழைய கதைகளையுடையன வாகும் (உரைமணிக் கோவை 147)

"பின்னே முழுமுதற் கடவுளை மக்கள் நிலைக்குத் தாழ்த்தியும் தாம் வணங்கத் துவங்கிய மக்களைக் கடவுள் நிலைக்கு உயர்த்தியும் கடவுள் நிலைக்கு மாறான பல கட்டுக் கதைகளைக் காலங்கள் தோறும் புதிய புதியவாய் உண்டாக்கி அவைகளையும் புராணங்கள் என்னும் பெயரால் வழங்க விட்டனர்” என்கிறார் (மேற்படி148)

வீரபத்திரரும் பிட்சாடணரும் இறைவன் உருவினர் அல்லர் என்கிறார்.

66

கந்தபுராணத்திலும் பரிபாடலிலும் காணப்படும் முருகப் பெ ருமானைப் பற்றிய கதை முருகப் பெருமான் பற்றியதன்று; ஒரு தமிழ் மன்னன் மற்றொரு தமிழ் மன்னனைக் கொன்ற கதையாகும்” என்கிறார் (மறைமலையடிகள் அரசு 131-2) அம்மி மிதித்தல் அருந்ததி காட்டல் போன்றவை இடைச்செருகல் என ஒதுக்குகிறார். பெரியபுராணத்தையும் ஆய்கின்றார் அடிகள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/292&oldid=1578422" இலிருந்து மீள்விக்கப்பட்டது