பக்கம்:மறைமலையம் 7.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

1.

2.

3.

4.

மறைமலையம் - 7

திருமுகப் பாசுரம் பெற்றவர் சுந்தரர் காலத்தில் இருந்த சேரமான் பெருமாள் நாயனார் அல்லர்.

பலகை விடுத்தது திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு அன்று.

சுந்தரர்க்கும் பரவையார்க்கும் சங்கிலியார்க்கும் நடந்த திருமணங்கள் கயிலாயப் பூங்காவில்

காட்சியின் விளைவு என்பது பொருந்தாது.

கண்ட

பெரிய புராணத்தில் பல இடைச் செருகல்கள் உண்டு என்பவை அவை (மேற்படி 130)

இறைமை :

66

‘கடவுள் ஒருவரே" என்பதும், “அவர் எவ்வாற்றானும் ஊனுடல் தாங்கி மனிதராகப் பிறவார்” என்பதும் அடிகளார் கண்ட முடிந்த முடிவாகும். (மறைமலையடிகள் வரலாறு, 649) 'காலைக் கதிர் முருகு; மாலைக் கதிர் சிவம்" 6 எனவும் காண்கிறார் (தமிழர் மதம்).

66

உயிரியல் :

"பிறப்பொக்கும்

எல்லா உயிர்க்கும்” என்னும் பெருநெறியா ளராகிய அடிகள் தம் நூல்கள் உரைகளிலும் பயில வழங்கியுள்ள சாதி வேறுபாட்டு ஒழிப்பு, சாதி வேறுபாட்டுத் தீமை என்பவற்றைத் தொகுத்துப் பார்ப்பின் அதுவே ஒரு பெரு நூலாகும் அளவு விரிவினதாம்.

சாதிப் பிரிவுக் கேடு

“காதற் காமம் காமத்துச் சிறந்தது” என்னும் தொல்காப்பிய வாழ்வியல் வாய்மையை விளக்கும் அடிகள், "இக்காதல் மாட்சி இந்நாள் இயல்கின்றதா? இல்லை! இல்லை! சிறிதுமே இல்லை!” என்று விளக்குகிறார்:

66

சாதி வேற்றுமை என்னும் தூக்குக் கயிறானது காதல் அன்பின் கழுத்தை இறுக்கி விட்டது. காதல் அன்பிற் சிறந்து மறுவற்ற மதிபோல் விளங்கத் தக்கவரான நம் பெண்மணிகளின் கற்பொழுக்கத்தை நிலைகுலைத்து அதனைப் பழிபாவங்களால் மூடிவிட்டது. எந்தப் பெண்மகளாவது தான் காதலித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/293&oldid=1578423" இலிருந்து மீள்விக்கப்பட்டது