மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்
269
இளைஞனை மணங்கூட இடம் பெறுகின்றனளா? எள்ளளவும் இல்லையே ஏன்?
ஒரு சாதிக்குள்ளேதான், ஒருபது வீடுகளேயுள்ள ஓர் இனத்திலேதான் அவள் ஒருவனை மணக்க வேண்டும். அவள் கயல்மீனை ஒத்த கண்ணழகியாய் இருந்தால் என்ன! கண் குருடான ஒருவனைத் தவிர வேறு மணமகன் தன் இனத்தில் கிடைத்திலனாயின் அவள் அவனையே தான் மணந்து தீரல் வேண்டும். அவள் முத்துக் கோத்தாலன்ன பல்லழகியாய் இருந்தால் என்ன! தன் பாழும் இனத்தில் ஒரு பொக்கை வாய்க் கிழவனைத் தவிர வேறு மணமகன் கிடைத்திலனாயின் அவள் அவனையே தான் மணந்து தீரல் வேண்டும்.
அறிவிலும்
அவள் பலகலை கற்றுக் கல்வி இசைபாடுவதிலும் நுண்ணறிவிலும் சிவநேய அடியார் நேயங்களிலும் சிறந்த கட்டழகியாய் ழகியாய் இருந்தால் என்ன! இறுமாப்பே குடிகொண்ட தன் சிறுமாக் குடியிற் கல்வியிருந்த மூலையே கண்டறியாதவனும் பாட்டுப்பாட வாயைத் திறந்தால் ஓட்டமாய் வண்ணானை வருவிப்பானும் அறிவை ஓட்டிவிட் வெறுமூளையுடையானும், கறுப்பண்ணன் மதுரைவீரன் மாரியம்மன் முதலான வெறுக்கத்தக்க பேய்கட்கு, ஊனும் கள்ளும் படைத்துக் குடித்து வெறிப்பானுமாகிய ஒருவனைத் தவிர வேறுமணமகன் கிடைத்திலனாயின் அவள் தன் சாதியை விட்டு வேறு சாதியிற் கலக்கலாகாமையின் அக்கல்லாக் கயவனையே கணவனாகக் கொள்ளல் வேண்டும்.
ஆ! பொருளற்ற இச் சாதி வேற்றுமைக் கொடுமையால் நம் அருமைப் பெண்மணிகள் படுந்துயர் மலையிலும் பெரிதோ! அன்றி ஞாலத்திலும் பெரிதோ! இவ்வளவுதான் என்று கூறல் ஒரு நாவால் இயலாது என்கிறார் (பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் (21-23)
எம்
“எல்லா மக்களும் ஒரு தாயின் பிள்ளைகளே யாதலால் அவரெல்லாரும் உடன்பிறப்புரிமை பாராட்டி எல்லா வற்றாலும் ஒருங்கு அளவளாவுதலே நன்றென்று ஏசுநாதரும் மகமது நபியும் கூறிய அறிவுரைகளைக் கேட்டு மேல்நாட்டு மக்களெல்லாரும் ஏதொரு வேறுபாடுமின்றி ஒன்றுபட்டு ஒழுகி