270
மறைமலையம் 7
―
உலகிற் சீரும் சிறப்பும் எய்திவருதலைக் கண்கூடாகக் கண்டு வைத்தும் நம் தெய்வ ஆசிரியர் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று முடித்துக் கூறிய அறவுரையினை நாம் கடைப்பிடியாது வாழ்நாள் எல்லையளவும் சாதியிறுமாப்புப் பேச்சைப் பேசிக் கூற்றுவனுக்கு இரையாய் ஒழிதல் பிற நாட்ட வராற் பெரிதும் இழித்துரைக்கப்படுகின்றதன்றோ” என்று பிற சமயங்களோடு ஒப்பிட்டு உரைக்கிறார் (மேற்படி 32)
66
ருவனுக்கு ஒரு பொல்லாத நோய் வந்தால் அதனை நீக்கலுறுவோன் அந்நோயை உண்டாக்கின மூலத்தை அறிந்தாலன்றி அவன் அதனை முற்றும் நீக்கமாட்டுவன் அல்லன். ஒரு நோயின் மூலத்தை அறிந்து அதனை அடியோடு களைந்த அளவானே அந்நோய் முற்றும் ஒழிந்து போம். அதுபோலச் சாதி வேற்றுமைகளை உண்டாக்கிய மூலங் களையும் நன்கு ஆய்ந்து கண்டு பின்னரவ் வேற்றுமைகளை ஒழித்தலே இன்றியமையாத செயற்பாலதாகும். (சாதி வேற்றுமையும் போலிச் சைவரும், 77)
என்கிறார். பலகுடிக் கலப்பு இல்லாமல் ஒரு குடியிலேயே காண்டு கொடுத்தலால் உண்டாகும் தீராக் கேடுகளையும் தெளிவாக உரைக்கின்றார் :
66
கட்டுக்கிடைத்
புதுநீர் வரத்தின்றிப் பழைய தண்ணீரேயுள்ள ஒரு குளம் நாற்றமெடுத்து நோய்ப் புழுக்களை உண்டாக்கி யார்க்கும் பயன்படாமல் வரவர வற்றி வறண்டு முடிவில் நீரற்றுப் போதல் போல அகல உள்ள குடிகளில் அறிஞராய் வலியராய் நல்லவராய்ப் பிறந்தார் தம் புதிய இரத்தமானது தமது பழங்குடிப் பிறந்தார்தம் உடம்புகளில் வந்து கலத்தற்கு இடம் கொடாத போலிச்
சவக்
குடும்பத்தினரும் தமது வலிவிழந்து பழைய இரத்தம் கெட்டு அகத்தும் புறத்தும் நோய்களுக்கு இரையாகி வற்றி வறண்டு தாமும் இருந்த இடம் தெரியாமல்சில காலத்தில் மாய்ந்து போகின்றனர்" என்கிறார். கடுஞ்சாதிப்பற்றால் விளையும் கொடும்பாடுகளை மூலங்கண்டு உரைக்கும் முடிவு ஈதாகும் (CLDYLIL 81-82)
மேலும், “மேற்சாதியார் எனக் கூறிக் கொள்ளும் ஓ! இரக்கமற்ற இந்து மக்களே! நீங்கள் (உங்களுக்கு ஒப்பாகிய