மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்
271
மக்களை) ஆடு மாடு கழுதை குதிரை பன்றி நாய் முதலான விலங்கினங்களினும் கடைப்பட்டவராக நடத்தியும், அவர்களுக்கு அரை வயிற்றுக் கூழுணவு கூடக் கிடைக்காமல் செய்தும், அவர்களில் ஆண்மக்களாயினவர் கோவணத்திற்கு மேல் ஒரு சிறு கந்தைத் துணி கூட உடுக்கவிடாமலும், அவர்களிற் பெண் மக்களாயினவர் தமது மார்பினை மறைத்து மேலாடை உடுப்பதற்குங் கூட மனம் பொறாமற் சினந்தும், அவர்கள் தூய்மையாய் இருக்கக் கல்வியறிவு தானும் புகட்டாமலும் நும்மோடொப்ப இறைவனாற் படைக்கப்பட்ட அம்மக்களைப் பெருந்துன்பத்திலும் அறியாமையிலும் இருத்தி, அவர்கள்பால் எல்லா வகையான வேலைகளையும் வாங்கி வந்தீர்கள். நுங்களுடைய அவ்வேழை மக்கட்கு உதவிபுரிதற்
பொருட்டு அருட்கடலாகிய ஆண்டவன் ஆங்கில
நன்மக்களையும் அவர் வழியே கிறித்துவக் குருமார்களையும் இந்நாட்டுக்கு வரும்படி அருள் புரிந்தான்" என்கிறார் (மேற்படி
88),
66
ஐயோ! இந்து மக்களே, ஓ போலிச் சைவர்களே, இன்னும் நுங்கட்கு இரக்கமும் நல்லறிவும் வந்த பாடில்லையே. நுங்களை நுங்கள் கால்வழியற்றுப் போக வேரோடு வெட்டி மாய்த்து வரும் பொல்லாத கோடறியாய்ச் சாதி வேற்றுமை இருப்பதுணராது. அதனை நுமக்குச் சிறப்புத் தருவதாக எண்ணி நீங்கள் மகிழ்வது எவ்வளவு பேதைமை.
66
கொத்தளத்தின்
ஊரின் நடுவே வெடிமருந்துக் மேலிருந்து கொள்ளிக் கட் கட்டை யைச் சுழற்றி மகிழ் வோனுக்கும்நுங்கட்கும் யாம் வேற்றுமை காண்கிலேம். ஒரு தீப்பொறியானது அக் கொத்தளத்தை வெடிக்கச் செய்து அவனையும் அவ்வூரிலுள்ளார் அனைவரையும் சிறிது நேரத்தில் படு சாம்பராக்கி விடுவது போலப் பாழுஞ் சாதி வேற்றுமையால் இனியுண்டாவதற்கு மும்மரித்து நிற்கும் ஒரு சிறு கலகமானது நுங்களையும் நுங்கள் இறுமாப்பினையும் நுங்கள் சாதிக் கட்டுப்பாடுகளையும் எளிதில் மாய்த் தொழிக்குமேயென அஞ்சுகின்றேம். வெள்ளம் வருவதற்கு முன்னரே அணை கோலி வைத்தல் அறிவுடையார் செயலாதல் போலப் பெருந் தீமைக்கு ஏதுவான கலகம் வருவதற்கு