பக்கம்:மறைமலையம் 7.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

மறைமலையம் - 7

முன்னமே அதனை வருவிக்கும் சாதி வேற்றுமையினைத் தாலைத்து விடுங்கள் என்று சாதி வேற்றுமை கோடரியாய்க் குல அழிவையும் நாட்டழிவையும் செய்வதை உருகி உருகி உரைத்து உய்யும் வழியாவது அதனை ஒழிப்பதே என்று வலியுறுத்துகிறார் (மேற்படி 88-9)

சைவ வேளாளர் சாதி வேற்றுமை பாராட்டலால் தாழ்த்தப்பட்டவராக்கப் பட்டமையை

அவரும்

எடுத்துரைக்கிறார்:

“தமக்கு உதவி செய்யும் தொழிலாளரைத் தாம் இழிந்த சாதியாராக நினைந்து தருக்கி அவர்கட்குப் பல காடுமைகளைச் செய்தமையால் அன்றோ சைவ வேளாளராகிய தாமும் பார்ப்பனரால் இழிவு படுத்தப்பட்டு இழிந்த சூத்திரரானார். “பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்” என்னும் பொய்யாமொழி ஒருகாலும் பொய்படாதன்றோ என்பது அது (சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் - 28)

ஆரியர்க்குள்ளும் முந்து வருணப் பிரிவு இருந்ததில்லை என்றும், இருக்கு முதல் ஒன்பது மண்டிலங்களில் வருணச் செய்தி இல்லை என்றும் அவர்கள் இந்திய நாட்டுள் புகுந்து தம்மை வெண்ணிறத்தர் எனவும் கருநிறத்தவரொடு போரிட்ட காலையில் வருணம் தலைகாட்டியது எனவும் விளக்குகிறார் (GLDYLIL 30-32)

“பாணரை நம் திருஞானசம்பந்தப் பெருமானும் திருநீல நக்கரும் தம்மோடு உடன் வைத்து அளவளாவினதும் அவ்வரு மையைத் தீவடிவில் இருந்த ஆண்டவன் (வலஞ்சுழித்து) ஏற்றுக் கொண்டு மகிழ்ந்ததும் போலிச் சைவர் உணரார் கொல்லோ என்றும் (மேற்படி 58) கூறுகிறார்.

காரைக்கால் அம்மையாரைப் பொருந்தா மணத்தில் சேர்த்தது பிழை என்கிறார் (ப.த.கொ.சை.சமயம் 24)

சுந்தரர் வரலாற்றை விரித்துரைத்து இறைவனே குலமணம் தவிர்த்துக் கலைமணம் சேர்த்தார் என்கிறார் (மேற்படி 25)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/297&oldid=1578427" இலிருந்து மீள்விக்கப்பட்டது