மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்
275
கல்வி எல்லார்க்கும் பொதுப் பொருள் என்பது தமிழ்நெறி. நம் செல்வர்கள் நம் தாய்மொழிப் பயிற்சிக்கு உதவாமல் பிறமொழிப் பயிற்சிக்குச் செலவிடுதல் ஐயகோ! கொடிது கொடிது! தன்னைப் பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை வாங்கத் தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்!
நம் தமிழ் நாட்டுக்கு ஆறாயிர நாழிகை வழி விலகிக் கிடக்கும் மேல் நாட்டிலுள்ள கிறித்தவக் குருமார்கள் இந்நாட்டுக்கு வந்து, நூறாயிரக் கணக்காக நம் நகரங்களிலும் சேரிகளிலும் பல்லாயிரக் கணக்கான கல்விச் சாலைகள் திறப்பித்தும், மாதா கோயில்கள் கட்டுவித்தும், இந்நாட்டவர் எல்லார்க்கும் ஏதொரு வேற்றுமையும் இன்றிக் கல்வி கற்பித்தும், கடவுள் உணர்ச்சி உண்டாக்கியும் பேருதவி புரிந்து வாரா நிற்க, நம் நாட்டு ஏழை மக்கள் ஒரு நாளுக்கு ஒருவேளை நல்லுணவு மின்றிப் பட்டினியும் பசியுமாய்க் கிடந்து நெற்றிக் கண்ணீர் நிலத்தில் விழப் பாடுபட்டுத் தேடிக் கொடுக்கும் பெரும் பொருளைப் பேழை பேழையாய் வைத்திருக்கும். செல்வர்கள், தமது பெருமைக்கும் தமது நலத்திற்கும் தமது மனைவி மக்களின் ஆடை அகலங் கட்கும் தம் வேடிக்கை விளையாட்டு கட்குமாகத் தமது பெரும் பொருளைச் செலவு செய்து கொண்டு, தமக்கு அப் பொருளைச் சேர்த்துக் கொடுக்கும் ஏழைகளிற் பெரும் பாலாரைத் தீண்டாதவரென ஒதுக்கி வைத்தும் அவர்க்கு நல்லுணவும் நல்வெள்ளாடையும் கூடக் கொடாதும் அவர் வணங்குதற்குத் தம் கோயில்களில் உள்வருதல் கூடத் தகாதென விலக்கியும் அவர் தம்மக்களொடு ஒப்ப இருந்து கல்வி பயிலுதலும் ஆகாதென அவரைத் துரத்தியும் அவ்வேழை மக்கட்குப் பெரும் கொடுமை செய்து வரல், தெய்வத்திற்கு அடுக்குமோ? ஏழையழுத கண்ணீர் சுவடறத் தேயத்து மாய்க்கும் காலம் அணுகுதல் ஓர்மின் என்கிறார். (ப.த.கொ.சை. சமயம் (41-42)
அழியாச் செல்வமாம் கல்வியைக் கைப்பொருளாகக் கொண்டவர் அப்பொருளைப் பேணிப் பயன்படுத்தாமல் கடுதலையும் எடுத்துரைக்கிறார் அடிகள் :
"இரவில் திருடும் திருடர்க்கும் வழிமறித்துக் கொள்ளை யடிக்கும் வழிப்பறிக்காரர்க்கும் கல்வியை உதவியாய்க் கொண்டு