பக்கம்:மறைமலையம் 7.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

11.

சாகுந்தல நாடக ஆராய்ச்சி

277

திருவிழாக்கள் செவ்வையாக நடைபெறுமாறு செய்வ துடன் திருவிழாவின் உண்மையையும் பயனையும் எடுத்துச் சொல்லல் வேண்டும்.

பொதுப் பெண்டிர் தொண்டு, பொட்டுக்கட்டல் ஆகியவை அடியோடு விலக்கப்பட வேண்டும்.

குருக்கள்மார், தமிழ்மொழிப்பயிற்சி சைவசித்தாந்தம் உணர்தல் தேவார திருவாசகம் ஓதல் வல்லவராய் இருக்கும் படி செய்தல் வேண்டும்.

வரும்படி மிக்க கோயில்களில் இருந்து வரும்படி இல்லாக் கோயில் குருக்களுக்குத் தக்க சம்பளம் கொடுக் கப்பட வேண்டும்.

இறைவன் திருவுருவத்திற்குக் குருக்கள்மாரே வழிபாடு செய்ய வேண்டுமல்லாமல் வணங்கப் போகிறவர் களெல்லாம் தொட்டுப்பூசித்தல் வேண்டுமென்பது நல்ல முறையன்று.

வணங்கச் செல்வோர்களில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று காட்டும் வேறுபாடு அடியோடு நீக்கப்படல் வேண்டும்.

கோயில் செலவு போக மிச்சத்தைத் தேவாரப் பாட சாலைக்கும் தனித்தமிழ்ப் பாடசாலைக்கும் சைவ சித்தாந்த சபைக்கும் தமிழ்நூல் எழுதுவார்க்கும் சைவசித்தாந்த விரிவுரையாளர்க்கும் வழங்கல் வேண்டும்.

பாட சாலை

கோயில் வரும்படி கொண்டு பார்ப்பனர்கட்கு மட்டும் உணவு கொடுத்தலும் ஆரியவேத அமைத்தலும் ஆங்கிலப் பள்ளிக் கூடங்கட்குப் பொருளுதவி செய்தலும் அடியோடு நீக்கப்பட வேண்டும்.

சிறுபருவமணத்தை ஒழித்தல் வேண்டும். பெண் மக்களுக்கு 20 ஆண்டும் ஆண்மக்களுக்கு 25 ஆண்டும் நிரம்பு முன் மணஞ் செய்தல் ஆகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/302&oldid=1578432" இலிருந்து மீள்விக்கப்பட்டது