278
12.
13.
14.
15.
-
ஆ
மறைமலையம் - 7
ஆணையாவது பெண்ணையாவது விலை கொடுத்து வாங்கும் கொடிய பழக்கத்தை வேரொடு களைவதற்கு எல்லாரும் மடிகட்டி நிற்றல் வேண்டும்.
முப்பதாண்டுகட் குட்பட்ட பெண்கள் கணவனை இழந்து விடுவார்களானால் அவர்களைத் திருமணம் செய்து கொடுத்தல் வேண்டும்.
ஆண்மக்களில் 40 ஆண்டுக்கு மேற்பட்டவர்கள் இளம் பெண்களை மணம் செய்தல் ஆகாது.
நாற்பதாண்டுக்கு மேற்பட்ட ஆண் மணஞ் செய்வா ராயின் அவர் வயதொத்த கைம் பெண்ணையே மணஞ் செய்து கொள்ளும்படி தூண்டுதல் வேண்டும்.
இவை அடிகளார், சீர்திருத்தம் என்னும் பகுதியில் எழுதிய கொள்கை விளக்கங்களாகும்.
பொது நிலைக் கழகம் தோன்றி இருபதாண்டுகள் பணியாற்றிய பின்னே இருபதாம் ஆண்டுப் பெருவிழா ஒன்று நிகழ்ந்தது. அவ்விழாவின் நிறைவில் (12.9.1930) பொது நிலைக் கழகச் சீர்திருத்த முடிவுகள் எனப் பத்துத் தீர்மானங்கள் காண்டு வரப்பட்டு ஆய்வும் நிகழ்த்தப்பட்டன. அத்தீர்மானங்கள் :
1.
2.
3.
4.
L மடத் தலைவர்கள் எல்லாக் குலத்தவர்க்கும் வேற்றுமை இன்றிச் சமயக் கிரியைகள் கற்பிக்க முயற்சி செய்தல் வேண்டும்.
கோயில்களில் எல்லாக் குலத்தவர்க்கும் வேற்றுமை இன்றிச் சமயக் கிரியைகள் கற்பிக்க முயற்சி செய்தல் வேண்டும்.
பழந்தமிழ்க் குடிமக்கள் தீண்டாதோர் எல்லாரையும் தூய்மையாகத் திருக்கோயில்களிற் சென்று வழிபா டாற்றப் பொதுமக்களும் கோயில் தலைவர்களும் இடம் தரல் வேண்டும்.
கோயில்களில் பொதுமாதர் திருப்பணி செய்தல்
ஆகாது.