பக்கம்:மறைமலையம் 7.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.

6.

7.

8.

9.

10.

சாகுந்தல நாடக ஆராய்ச்சி

279

வேண்டப்படாதனவும் பொருட் செலவு மிக்கனவும் சமய உண்மைக்கு முரண்பட்டனவும் அறிவுக்குப் பொருத்த மற்றனவுமான திருவிழாக்களையும் சடங்குகளையும் திருக்கோயில்களிலே செய்தல் முற்றும் கூடாது. தூயதும் வேண்டப்படுவதுமான சடங்கும் திருவிழாவும் குறைந்த செலவிலேயே செய்தல் வேண்டும்.

உடனே செயன்முறைக்குக்

சாரதா சட்டத்தை கொண்டு வருதல் வேண்டும்.

கைம்பெண்மணம் முதல்நூல் முடிவுக்கு ஒத்ததே. மற்றவை முதனூல் முடிவுக்கு ஒத்தவைகள் எனினும் தாலியறுத்தல் மொட்டையடித்தல் வெள்ளைப் புடைவையுடுத்தல் பட்டினி கிடத்தல் முதலிய வெறுக்கத் தக்க செயல்களாற் பெண்களைத் துன்புறுத்தல் ஒவ்வாது. எனவே கைம்பெண்மணம் செயல் முறைக்கு வர அறிஞர்கள் நன்முயற்சி செய்தல் வேண்டும்.

சாதிக் கலப்பு மணம் வரவேற்கத் தக்கது.

தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழுக்குத் தலைமை தருதல் வேண்டும்.

தமிழைத் தனிப்பாடமாக பி.ஏ. சிறப்பு வகுப்பு (பி.ஏ. ஆனர்சு) ஏற்படுத்தல் வேண்டும்.

தமிழர்மதம்

அடிகளாரின் சமய ய நோக்கு ன்னது என்பதை ஆற்றொழுக்கெனச் சொல்லிச் செல்வதொரு நூல் தமிழர் மதம். அதன் பெயரே “தமிழர்” என்னும் ஒருமைப் பெயர் கொண்டு விளங்கும் உயர்வை வெளிப்படுத்தும். மற்றவற்றுள் “சைவம்” என்ற அடிகள் தமிழர் மதம் என்னும் பெருநிலையில் கண்ட மாட்சி அது. அதில் உள்ளவற்றை அவர்தம் மாணவர் தவத்திரு அழகரடிகள் “மறைமலையடிகளார் வரலாற்று மாட்சியில் பட்டியலிட்டுக் காட்டுகிறார். இங்குச் சுட்டப் பெற்றவற்றுடன் வேறு சிலவும் கொண்ட அத் தொகுப்புரை

காண்க:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/304&oldid=1578434" இலிருந்து மீள்விக்கப்பட்டது