1.
280
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
மறைமலையம் - 7
தமிழர்கள் தமது பழம் பெருமையையுணர்ந்து அதற் கேற்ப நடத்தல் வேண்டும்.
தமிழ்மொழியைத் தூய்தாய் வளனுற வளர்த்து வருதல் வேண்டும்.
தமிழ் கற்பார் சிலரும் அடிமை வாழ்க்கையையே தமக்கொரு பெருமை வாழ்க்கையாகவும் பிழைபட ஒழுகுகின்றார் (இதனை
நினைந்து.. வேண்டும்)
அகற்றல்
பண்டுபோல் தமக்கும் தம் இல்லங்களுக்கும் தம் ஊர்களுக்கும் பிறவற்றிற்கும் எல்லாம் தூய தமிழ்ப் பெயர்களையே அமைத்தல் வேண்டும்.
தமிழரெல்லாரும் தம்மைத் தமிழரென்றே வழங்கக் கடமைப்பட்டிருக்கின்றனர். தம்மை எவரும் சூத்திரர் என்னும் இழிசொல்லால் அழைக்க இடந்தரலாகாது. தாழ்ந்த வகுப்பினராய் இருப்பவரை இழித்துப் பேசுதலும் அழைத்தலும் ஒரு சிறிதும் கூடாது.
தொழில் வேற்றுமையால் உண்டான குலவேற்று மையையே பெரிது பாராட்டித் தமிழ்மக்கள் தம்முள் உண்ணல் கலத்தல்களைச் செய்யாமல், தனித்தனி வெவ்வேறினங்களாய்ப் பிரிந்து வலிவிழந்த துன்ப வாழ்க்கையில் கிடந்துழல்வது நிரம்ப வருந்தத் தக்கதாய் இருக்கின்றது.
ஊனுண்ணாச் சைவ ஒழுக்கத்தினின்றும் தாம் சிறிதும் வழுவுதல் ஆகாது.
காதலன்பைக் கருதாமல் செய்யும் போலி மணத்தை அறவே ஒழித்து விடல்வேண்டும்.
(மக்களுக்குச்) செல்வப் பொருளைத் தேடித் தொகுத்து வைக்கும் பெற்றோர், அவர்க்குத் தீமையே செய்பவர் ஆவர்.
செலவுக்கு மேற்பட்ட பொருளைத் தனித்தமிழ்க் கல்லூரி வைத்துக் கற்பித்தற்குக் கொடுத்தல் வேண்டும்.