11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
சாகுந்தல நாடக ஆராய்ச்சி
281
வரை துறையின்றி உணவளிக்கும் அறம் பயன் தரா. உறுப்பறைகட்கும், பிணிப்பட்ட ஏழைகட்கும், கல்வி பயிலும் எளிய மாணவர்க்கும் நூல் ஓதுவிக்கும் வறிய ஆசிரியர்க்கும், புதியன பழையன ஆராய்ந்து பல துறைகளிற் பயன்படும் நூல்கள் இயற்றும் நூலாசிரியர் கட்கும், சொற்பொழிவு நிகழ்த்தும் நாவலர்க்கும், தவவொழுக்கத்தில் நிற்கும் துறவிகட்கும் உணவும் பொருளும் வேண்டுமட்டும் உவந்து நல்குதலே உண்மையான அறமாகும்.
முழுமுதற் கடவுள் ஒன்றேயன்றிப் பல இல்லை என்னும் உறுதியில் ஒரு சிறிதும் நெகிழலாகாது. பிறப்பு இறப்புகளிற் கிடந்துழன்ற சிறு தெய்வங் களையும் கண்ணன் இராமன் முதலான அரசர்களையும் கடவுள் நிலையில் வழிபடுதல் மன்னிக்கப்படாத பெருங்குற்றமாய் முடியும். திருக்கோயில்களை விட மக்களுக்கு உறுதிபயக்கக் கூடியது வேறெதும் இல்லை.
வழிபடும் முறைகளும் வடநாட்டைவிடத்தென்னாட்டின் கண்ணேதான் சிறந்தனவாய் நடைபெறுகின்றன. வடநாட்டுக் கோயில்களில் மக்கள் தாமே நீரும் பூவும் தென்னாட்டு முறை
ட்டுவணங்குகிறார்கள்.
எவ்வளவோ நலந்தருவதாய்க் காணப்படுகின்றது. சிறிதும் மாற்றாமல் நடப்பித்தலே வேண்டற்பாலது. கோயிலுக்கு வழங்குவது உண்மையில் வீணாகுமா? இல்லறத்தார் வேறு துறவறத்தார்வேறு என்னும் தவறான கருத்தை நம் தமிழ்மக்கள் அறவே ஒழித்து விடல் வேண்டும். (தமிழர் மதம் 260-76)
என்பவை அவை.
மேலும் தாய் தந்தையரையே தெய்வமாக நினைந்து வணங்கி வருதல் வேண்டும் என்பது தமிழர்தம் முதற்றெய்வக் கொள்கை என்கிறார் அடிகள் (த.ம.73)