சாகுந்தல நாடக ஆராய்ச்சி
285
நாடக நூல்கள்
தமிழ்க் காவலர் மறைமலையடிகளார் சிறந்த இலக்கியப் படைப்பாளராகவும் பயிற்சியாளராகவும் விளங்கியவர். இலக்கியப்படைப்பிலும் ஒன்றிரண்டு துறைகளை மட்டும் சார்ந்து ஒரு வரையறைக்குள் அடங்கிப்போகாமல் அடிகளார் திறன் அனைத்துத் துறைகளிலும் அழகுபட மிளிர்கிறது. அடிகளாரின் நாடகப் படைப்புகளாக (அ) சாகுந்தலம் (1907). (ஆ) அம்பிகாபதி அமராவதி (1954) ஆகியன விளங்குகின்றன சாகுந்தல நாடக ஆராய்ச்சி (1934) அடிகளாரின் நாடக ஆராய்ச்சி நூலாக அமைந்துள்ளது.இப்படைப்புகளால் சிறந்த நாடக நூலாசிரியராகவும், நாடக நூலாராய்ச்சி யாளராகவும், அத்துறைகளின் முன்னோடியாகவும் அடிகளார் திகழ்கிறார். தனித்தமிழில் தம் கருத்துகள் அனைத்தையும் வெளிப்படுத்தும் பெருவிழைவினை அடிகளார் இவ்விரு நாடகங்கள் வாயிலாக நிறைவு செய்துள்ளார்.
1
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப் பெறும் குறிப்பிடத்தகுந்த வடமொழிக் கவிஞர் நாடக நூல் வல்லார்காளிதாசரின் புகழ்மிகு படைப்பு சாகுந்தலமாகும்.2 இம் முதல் நூலின் முறைமை கெடாமலும் தமிழ்நூல் தன்மை தழுவியும் அடிகளார் இதனைத் தமிழாக்கம் செய்துள்ளார். முதல் நூலைச் சிறிதும் பிழைபடாமற் பின்பற்றும் இந்நூலில் பாட்டும் உரையும் கலந்து நிற்கின்றன. மறைமலையடிகள், பாவனந்தம் பிள்ளை, ரா. ராகவையங்கார் ஆகியோரின் சாகுந்தல நாடக மொழியாக்கங்கள் மிகுந்த இலக்கிய நலஞ்செறிந்தனவாகும். முதல் நிலையில் உள்ள அடி களாரின் மொழியாக்கம் ஒப்பற்ற பேரழகு வாய்ந்ததாகப் பல்வேறு தமிழறிஞர்களால் பாராட்டப் பெற்றதாகும். சாகுந்தல நாடக அடிகளாரின் படைப்பு
க
மொழிபெயர்ப்புகளிடையே