286
மறைமலையம் 7
―
குறிப்பிடத் தக்கதாக விளங்குதல் காணலாம்.
காளிதாசரின் கலைத்திறமும் அடிகளாரின் ஆய்வுத் திறமும் ஒருங்கு விளங்குகிற வகையில் அமைந்தது 'சாகுந்தல நாடக ஆராய்ச்சி'யாகும். இந்நூலின் நாடகக் கூறுகளையும் நாடக மாந்தர் இயல்புகளையும், நாடக ஆசிரியர் வரலாற்றுத் திறங்களையும், நாடகத்தின் குறைநிறைகளையும் அடிகளார் ஆராய்ந்துள்ளார்.
நூல் நோக்கும் காரணமும்
3
“தமிழகத் திரைப்பட உலகில் அம்பிகாபதிப் படத்தைப் பார்த்த பின்பே, அவ்வினிய வரலாற்றுக் கதையில் ஆர்வமும் அதில் காலக் கேட்டால் படிந்துள்ள மாசு மறுககள் அகற்றி, அதில் வரலாற்று வாய்மையும் தமிழ்பபண்பு வாய்மையும் மிளிர் விக்க வேண்டுமென்ற எண்ணம் தமக்கு ஏற்பட்டதாக அடிகளார் இதை எழுதிய காலை” தம்மிடம் கூறியுள்ளதாகக் குறிப்பிடுகிறார் பன்மொழிப்புலர் அப்பாதுரையார்.3 அம்பிகாபதி அமராவதி நாடகம் அடிகளாரின் இறுதிக் காலத்தில் இயற்றப்பெற்றதால் அவர்தம் கலைத் திறங்களின் நிறை நிலைகளை இந்நாடகத்தில் காணலாம். இன்றியமையாத உண்மை நிகழ்ச்சிகளை உள்ளதை உள்ளவாறும் உள்ளதை உணர்ந்தவாறும் காட்டி மாந்தர்க்கு உண்மையறிவு ஊட்டும் உயரிய நோக்கினது இந்நூல். 'அம்பிகாபதி அமராவதி உரையும் பாட்டும் கலந்த எழில்மிகு இனிய நாடகமாகும். அடிகளாரின் பல்துறை அறிவுக்கும் புலமைக்கும் திறனுக்கும் இந்நூல் தக்க சான்றாகும. பிறமொழிக் கலப்பின்றி, பேச்சுத் தமிழும் கொச்சைத் தமிழும் கொண்டு நாடகநூல் எழுத முடியுமென்பதையும் அடிகளார் மெய்ப்பித்துள்ளார்.
இன்ப அன்புவாழ்வுக்கு வழிகாட்டும் வகையாலும் இனிய காதலின் இன்பம் பெருகவும் இறையருள் வேண்டிப் பாடுகிறார் அடிகளார்.
“அன்பினுருக் கொண்ட அம்மையினோ டென்றும் ஆர்ந்தருகி இன்பினுயிர்கள் இசைவுடன் வாழ இரங்கியருள்
பொன்பிதிர் செஞ்சடைப் பெம்மான் சிவன் இந்தப் புல்லுலகில் துன்பின்றிக் காதலர் வாழ்ந்து தனைத்துன்னத் தூண்டுகவே'
994