பக்கம்:மறைமலையம் 7.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடக ஆராய்ச்சி

287

எனத் தம் நூற்கொள்கையை இந்நாடக நூலின் இறுதியில் கூறியுள்ளார்.நாடகமென்னும் அழகிய உடலுக்குக் கதையெனும் இன்றியமையாதது. கதையமைப்பாலும் கதைக் கருவாலும் அம்பிகாபதி அமராவதி சிறந்து விளங்குகிறது.

உயிர்

அடிகளாரின் நாடக நூல்களில் உலகியல் உண்மைகளும் வாழ்வியல் வரையறைகளும் நெறிமுறைகளோடு அழகுபடக் கூறப்பெற்றுள்ளன. அனைத்து வாழ்வுக்கு அடிப்படையாக விளங்கும் இல்லறத்தின் இயல்பு குறித்தும், அதன் மேன்மைக் கான வழிவகை குறித்தும் பெண்டிர்க்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார் அடிகளார்.

உளவியலும் உலகியலும்

கணவன் இல்லஞ் சென்றவுடன் மூத்தோர்க்குப் பணிவிடைகள் செய்தலும், கணவன் வெகுளும் காலங்களில் பொறையுடை யளாயிருத்தலும், ஏவலாளர்பால் நயமாக நடந்து கொள்ளுதலும், செல்வ வளங்களுக்காகச் செருக்கடை யாதிருத்தலும், இல்லக் கிழத்தியாரிடையே இருக்க வேண்டிய ன்றியமையா இயல்புகளாம்.5 “கள்ளம் அறியாத மகளிர்க் குள்ள நாணம் அது புலனாதற்குரிய இடத்தன்றிப் புலனாகாது. மற்றுக், கள்ளம் அறிந்தார்க்குள்ள நாணமோ வேண்ட ா விடத்தும் வெளிப்பட்ட படியாயிருக்கும். எனவே, கள்ளவுள்ளத் திற்கும் நாண் மிகுதிக்குந் தொடர்புண்டென்பது அறியற்பாற்று. மேலும், நாணம், அச்சம், மடன், கற்பு, என்னும் மகளிரின் நாற்பெரும் நல்லியல்புகளின் பாற்பட்ட கள்ளம் இழிவுடைத் தன்று. இவையும் இவற்றின் வழியினதான கற்பொழுக்கமும் இலரான பெண்டிர்பாற் காணப்படும் கள்ளமே கடியத்தக்கதும்

இழிவுடையதுமாகும்.

7

996

உலகுயிர்களின் முயற்சிகள், அறிவுமுயற்சி, தொழின் முயற்சி என்னும் ருவகையில் அடங்கும். இவ்விருவகை முயற்சிகளின் நோக்கமும், துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமுமே யாம். உலகத்து உண்மை நிகழ்ச்சியின் நிகழ்வு போன்ற பிறிதொன்றின் நினைவும் தோற்றமுமே மக்களுள்ளத்தினைப் பெரிதும் கவரும் இயல்பினதாகும்.8 “மனக் கவர்ச்சியினை விளைக்கும் எந்த உயர்ந்த தோற்றத்தை எந்த அழகிய பொருளைக் கண்டாலும், அவற்றோடொத்த பிற பொருட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/312&oldid=1578443" இலிருந்து மீள்விக்கப்பட்டது