சாகுந்தல நாடக ஆராய்ச்சி
289
புலவர்கள் பெறும் பொருளுதவிக்காகப் பொறாமைப்படும் இவர்கள் தம் மெய்யான மேன்மைச் சைவ சமயக் கொள்கை களிலிருந்து மெல்ல நழுவிச் செல்லம் நஞ்சு நெஞ்சினர்.13 இங்கிருந்த இனிய கலைகளின் இறப்புக்கு இத்தகையோரே காரணமாவர். தம் நாட்டுட் புகும் அயலவர் ஒழுகலாறுகள் எத்திறத்தவாய் இருப்பினும் அவை தம்மை ஆராயாது கைப்பற்றித் தமக்குரிய சீர்த்த பண்டையுரிமைகளையெல்லாம் எளிதில் இழந்து விடுதற்கண் முன்நிற்பாரான நந்தமிழ் மக்களிடையே இசை நாடகத் தமிழ் இறந்துபட்டது இயல்பேயாகும்.”14 தம் ஒழுகலாறுகளின் உயர்வுகளையும் பிறவற்றின் பிழைபாடுகளையும் நன்குணர்ந்து தமிழ்மக்கள் பின்பற்ற வேண்டும்,
உரையாடல் வகையும் திறனும்
அடிகளாரின் பிறதுறை நூல்களைப் போன்றே நாடக நூல்களும் நடைநலன்களில் சிறந்து விளங்குகின்றன. இனிய எளிய உரைநடையில் எழிலார்ந்த இயற்கைக் காட்சிகளைக் கண்முன் நிறுத்திக் காட்டுதலில் வல்லவர் அடிகளார்.
ப
'பேட்டிளங்கிளிகள் உள் உறைகின்ற மனப்பொந்துகளின் வாய்களிலிருந்து விழுந்து மரங்களின் கீழ்க் காட்டுத் தானியங்கள் இறைந்து கிடக்கின்றன... நெய்ப்பற்றுள்ள கற்கள் சிதர்ந்து மினு மினுவென்று மிளிர்கின்றன... தென்றள் காற்றாற் சிற்றலை தோன்றுங் கால்வாய் நீரில் மரங்களின் வேர்க் கற்றைகள் முழுகி அலைசப்படுகின்றன. அதோ திகழும் இளமென்றுளிர்களின் நிறமானது தூய்தாக்கிய வெண் ணயைச் சொரிந்து வேட்கும் புகையினாற் பல்வேறு நிறமாக மாறுகின்றன. இவ்வாறு கவின்மிகு காட்சிகளைக் கண்முன் காட்டும் சொல்லோவியங்களை அடிகளார் ஆக்கியுள்ளார். அழகுமிக்க உரையாடல்களை அடிகளார் அமைத்துள்ளார்.
66
"15
ருவழகி” நான் உன்னை நீக்கினமையினால் உண்டான துயர நினைவு நின் நெஞ்சினின்றும் ஒழிவதாக! அந்நேரத்தில் என்மனம் ஏதோ அறியப்படாத காரணத்தால் வலியதொரு மாயத்தில் மயங்கி நின்றது. இருள் வடிவான மலகுணவலி மிகுந்துள்ளவர்களின் நிலை மங்கலப் பொருள்களித்திலும்