290
மறைமலையம் - 7
9916
பெரும்பான்மையும் இத்தன்மையதாகவே இருக்கின்றது. குருடன் தன் தலையிற் சூட்டப்பட்ட மலர் மாலையையும் பாம்பென்றஞ்சி எறிந்து விடுகிறான். என அரசன் சகுந்தலை யிடம் கூறுமிடத்திலும் விரும்பிய அறம்பொருள் கிட்டும் பொழுது அதனைத் துய்க்கும் அறிவும் திறமும் இயல்பாகவே வேண்டப்படுதல் போலவே ஆசிரியரானவர் அன்புக் காதலரான போது அருகிருந்து அன்பு பாராட்டி உரையாடுதல் வேண்டித் தனக்குள் அமராவதி கூறுமிடத்திலும்,7 “அமரா வதியை மறப்பதும் என்னுயிரைத் துறப்பதும ஒன்றே” என அம்பிகாபதி கூறுமிடத்திலும்18 கருத்துச்செறிவு உணர்ச்சி ஆகியன மிக்க அடிகளாரின் அழகிய உரையாடல் திறம் வெளிப்படுகின்றது.
செறிவான செந்தமிழ் நடையிலும் நாடக மாந்தர்களின் இயல்புக்கும் நிலைக்கும் ஏற்ற வகையிலும் அடிகளாரின்நாடக உரையாடல் அமைந்துள்ளன. “கண்மணி! என் காதற் செல்வி! பெறுதற்கரிய பொருளை ஒரு வறியவன் பெற்று இன்புற வேண்டுமானால் அதற்கான முயற்சியை அவன் அல்லும் பகலுஞ் செய்து அல்லற்பட்டே தீரல் வேண்டும் 6 எனவும், அடி என் கண்ணாட்டி, வெள்ளாச்சி! என்னடி செய்யிறது! நம்ம ராசா பூசைக்கு வேணும் பூவை எவனோ வேலியெ தாண்டிவந்து ராவேளையில் பறிச்சிக்கிட்டு போனான்.
66
ராசா
9919
சாவோ ‘எங்கடா கருங்குவளைப்பூ, அல்லிப்பூ, தாமரைப்பூ? எங்கடா மகிழம்பூ பவளமல்லி, சந்தப்பூ, நாரத்தம்பூ, பன்னீர்ப்பூ? எங்கடா முல்லைப்பூ, சம்பங்கிப்பூ, பிச்சிப்பூ?” என்று நாடோறும் என்னைக் கேட்டுக்கிட்டு என்மேல் சீறி விழுகிறார். இன்னெ ராவுலே அந்தத் திருடெனக் கண்டுபிடிச்சு நாளெக் காலம்பெறெ அவனெ ராசாகிட்ட ஒப்பிக்காவிட்டா, ராசா என்னெ தோட்டத்தெ விட்டுத் தொரத்தி விடுவாராம், என்னடி செய்றிது; நம்ம பிளெப்பு வாயிலே மண்ணுவிழும் போலிருக்குதே!"20 எனவும், “நம்மஎசமான் ராசாகிட்டே கட்டளெ பெத்துக்கிட்டுக்கையிலே ஒரு ஏடு வைச்சுக்கிட்டு இந்த வளியா வருராங்க. அடெ! நீ களுகுக்கு இரையாய் போவே; அல்லாட்டி நாய் வாயைப் பாப்பே 6 எனவும் அமையும் பகுதிகளால் உள்ளதை உள்ளவாறும் உணர்த்தியும் எழுதிக் காட்டும் அடிகளாரின் இயல்புணர்ச்சி பெறப்படுகிறது.
நீ