292
28
―
மறைமலையம் 7
விறகுக்காக வளர்ந்த முரட்டுச் செடியினை மென்மலர் இதழால் அறுக்கத் துணிந்தது போன்றது அழகு நலன்மிகு சகுந்தலையைத் தவத் தொழில்களில் ஈடுபடுத்தியதெனவும்,26 துன்பந் தொடர்ந்தது ஏற்கனவே இருக்கும் கட்டிமேற் சிலந்தியெழுந்தாற் போலிருந்ததெனவும், 27 முழுமதி நிலவைத் தன் முன்றானையில் மூட முடியாதது போன்றது காதலன் பெனவும், காதலான்பு பேராறு கடலில் கலப்பதை ஒத்த இயல்பினதெனவும்?” நல்லியல்பு மெல்லியள் மேலிட்ட சாபம், புதுமல்லிகைக் கொடிமேல் வெந்நீர் தெளிப்பதொக்கு மெனவும்,3 நன்மக்கட்பேறு தக்க மாணவனுக்குக் கற்றுத்தந்த கல்விபோல் நற்பயன் தரத்தக்கதெனவும்,31 உள்ளத்துணர்வு களால் உயர்நிலையும் மாறுபடுமென்பதை ‘பூனையாற் பிடியுண்ட சுண்டெலிபோல் என் உயிரில் யான் நம்பிக்கை யற்றவன் ஆகின்றே' னெனவும்32 குறிப்பிடப் பெறுவன அடிகளார் உவமைத் திறனுக்கும் உரையழகுத் திறனுக்கும் சான்றுகளாம். இவற்றில் இயற்கை யோடியைந்த உண்மை களும், எளிய பொருட்புலப்பாடுகளும் சிறப்புற விளங்குகின்றன. முதல் நூல் அழகுகள் தமிழ்நூல் தகுதிகளோடு அடிகளார் கலைத்திறனால் மேலும் மிளிர்கின்றன.
உ
L
தேனும்பாலும் போல இனிமையும் நலனும் பயந்து பிரிவின்றிக் காதலர் வாழ வாழ்த்துக் கூறுதலும்,33 பொய்ம்மைப் புனைகதைகள் பாடுதல் ஒரு முயற்கொம்பின் மேலேறிச் சென்று வான்வெளியில் மாளிகை கட்டுதலை ஒக்குமெனக் கூறுதலும்,34 காதலன்பால் காதலன்பினால் கசிந்துருகும் மனநிலையைக் கதிரவனால் முழுதுருகும் பனிப்பாறையெனக் கூறுதலும், காதலனைக் கதிரவனாகக் காட்டுதலும்,35 காவலர் நடுவில் காதலர் நிலை முட்செடிகளினிடையே கிளம்பிய நெற்பயிர்போல வெனக் கூறுதலும்.36‘அரசரொடு உறவாடுவது நெருப்பொடு உறவாடுதலையே ஒக்கு'மெனக் கூறுதலும் அடிகளாரின் உரையாடல் திறனிலமைந்த உண்மையழகுக் கூறுகளாம். உரையாடல்களின் உணர்வோட்டத்திற்கும் இயல்புணர்ச்சிக்கும் இவ்வுவமையழகுகள் உறுதுணையாக விளங்குதல் வெளிப்படை. மேலும் அவை கருத்துச செறிவுக்கும், கற்பனையழகுக்கும் காரணங்களாகிக் கற்பார்
நெஞ்சங்களுக்குக் களிப்பூட்டுகின்றன.